நிதி நகரமான மும்பையில் 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் 820 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நகரம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
நிதி நகரமான மும்பையில் 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் 820 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நகரம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
சரி, இந்த நகரங்களில் தமிழக நகரங்கள் இடம் போற்றுள்ளனவா மற்றும் பிற நகரங்களின் நிலை என்ன என்று இங்குப் பார்ப்போம்.
மும்பை
நியூ வார்ல்டு வெல்த் அறிக்கையின் படி இந்தியாவின் பணக்கார நகரமாக முதல் இடத்தை மும்பை பிடித்துள்ளது.
அதற்கு அடுத்து டெல்லி இரண்டாம் இடத்தையும், பெங்களூரு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
பிற நகரங்கள்
மற்ற வளரும் நகரங்களில் சூரத், அகமதாபாத், விஷாகபட்டினம், கோவா, சண்டிகர், ஜெய்ப்பூர், வதோத்ரா ஆகிய நகரங்களில் மொத்தம் 6.2 டிரில்லியன் டாலர் செல்வ மதிப்புகளுடன் 264,000 மில்லியனர்களும், 95 பில்லியனர்களும் உள்ளனர். இந்தத் தரவுகள் எல்லாம் 2016 டிசம்பர் மாதக் கணக்கின் படி வெளியிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்
310 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 9,000 மில்லியனர்கள் மற்றும் 6 பில்லியனர்களுடன் 4 வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது.
கொல்கத்தா
290 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 9,600 மில்லியனர்கள் மற்றும் 4 பில்லியனர்கள் கொல்கத்தாவில் உள்ளனர்.
சென்னை
தமிழகத்தின் தலைநகரமான சென்னை 150 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 6,600 மில்லியனர்கள் மற்றும் 4 பில்லியனர்கள் உள்ளனர். சென்னைக்கு அடுத்த இடத்தில் குர்கானில் 110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4,000 மில்லியனர்கள் மற்றும் இரண்டு பில்லியனரர்கள் உள்ளனர்.
டெல்லி
இந்தியாவின் தலைநகரமான இரண்டாம் இடம் பிடித்த டெல்லியில் 450 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 23,000 மில்லியனர்கள் மற்றும் 18 பில்லியனர்கள் உள்ளனர்.
பெங்களூரு
இந்தியாவின் சிலிகான் வேலி என்ற அழைக்கப்படும் மூன்றாம் இடம் பிடித்துள்ள பெங்களூருவில் 320 பில்லியன் டாலர் சொல்வ மதிப்புடன் 7,700 மில்லியனர்கள் மற்றும் 8 பில்லியனர்கள் உள்ளனர்.
சக்திவாய்ந்த வளர்சி
அடுத்த 10 வருடங்களில் இந்தியா உள்நாட்டு நிதி சேவை, ஐடி, ரியல் எஸ்டேட், ஹெல்த் கேர் மற்றும் ஊடகத் துறைகளில் நல்ல வளர்சியைப் பெறும். அதிலும் மருத்துவத் துறை மற்றும் மருத்துவக் காப்பீடு துறை எல்லாம் தரமான வளர்ச்சியைப் பெறும். இதில் ஹைதராபாத், பெங்களூரு, பூனே ஆகிய நகரங்கள் முக்கியப் பங்கை வகிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பணக்கார புறநகர்கள்
மும்பை பிறநகரங்களில் பாந்த்ரா, ஜூஹூ, கோரேகானுக்கு, பரேல், வோர்லி, பாம் பீச் ரோடு ஆகியவையும், டெல்லியில் வெஸ்டெண்ட் கிரீன்ஸ், தேரா மண்டி, கிரேட்டர் கைலாஷ், லுடியென்ஸ் ஆகியவையும், கொல்கத்தா (பாலிகன்கே, அலிப்பூர்), சென்னை (போட் கிளப் சாலை, போயஸ் கார்டன்) ஆகியவை புற நகர்களில் பணக்கார நகங்களாக உள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications