டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் 50 லட்ச பணியாளர்கள், 58 லட்ச ஒய்வூதியதார்களின் அகவிலைப்படி அளவை 2-4 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு மார்ச் மாத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
அகவிலைப்படி
நாட்டில் நிலவும் பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதார்களுக்கு அவர்களது சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்க அளிக்கப்படுவது தான் அகவிலைப்படி.
ஜனவரி 1
இப்புதிய அகவிலைப்படி (Dearness Allowance) 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
மாறுபட்ட ஒன்று
இந்நிலையில் மத்திய அரசு அறிவிக்க உள்ள அகவிலைப்படி உயர்வில் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பிற்கு உடன்பாடு இல்லை என்றும், மேலும் நாட்டில் நிலவும் பணவீக்க அளவிற்கு இது மாறுபட்டதாக இருப்பதாகவும் ஊழியர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளது.
கே கே என் குட்டி
மத்திய அரசும், ஊழியர்களும் ஒப்புக்கொண்டதன் படி அகவிலைப்படியில் 2 சதவீத உயர்வை மத்திய அரசு மார்ச் மாத முடிவிற்குள்ள வெளியிட உள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது என மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கே கே என் குட்டி பிடிஐ செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
சில்லறை பணவீக்கம்
தொழிற்துறை ஊழியர்களின் நுகர்வோர் பணவீக்கம் குறித்த ஆய்வில் ஊழியர்கள் அமைச்சகம் திரட்டிய தகவல் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மத்திய அரசு 12 மாத சில்லறை பணவீக்கத்தின் சராசரி அளவை ஏற்று அகவிலைப்படியை அறிவிக்க உள்ளது.
2-4 சதவீத உயர்வு
இதன் மூலம் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பில் இதன் அளவை 2-4 சதவீதம் வரை உயர்த்தும் எனத் தெரிகிறது.
கடந்த வருடம் மத்திய அரசு இதன் அளவை 6 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications