சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தகச் சூழ்நிலையின் காரணம் இந்தியா மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 86 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட விலை உயர்வில் இதுவே அதிகமாகும்.
சரி, மானியம் இல்லாத சிலிண்டர் என்றால் என்ன..?
மானியம்
மத்திய அரசு தற்போது ஏரிவாயு நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை முழுமையாகக் குறைத்துவிட்டு மக்களுக்கு அதற்கான மானியத்தை அளித்து வருகிறது.
இத்தகைய மானியத்தை வேண்டாம் எனக் கூறியவர்களும், வருடத்திற்கு 12, 14.2 கிலோ சமையல் சிலிண்டருக்கு அதிகமாக வாங்கப்படுபவர்களுக்கும் இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்விற்கு முன்பு வரை ஒரு 14.2 சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 651.50 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம்
பிப். 1ஆம் தேதி இதன் விலை மத்திய அரசு 66.5 ரூபாய் உயர்த்திய நிலையில் தற்போது 86 ரூபாய் உயர்த்தியுள்ளது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விலை உயர்வு
அக்டோபர் 2016க்குப் பின் இந்தியாவில் தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது. தலைநகர் டெல்லியில், செப்டமர் மாதம் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை 466.50ஆக இருந்த நிலையில் தற்போது 271 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் நிறுவனங்களுக்குத் தங்களது மானிய அளவுகளை 13 வரை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களே எரிவாயு வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
8 முறை உயர்வு
2016ஆம் நிதியாண்டில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மட்டும் சுமார் 8 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களுக்கான மானிய தொகை வங்கி கணக்கில் சரியான முறையில் வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
ஒரு கிலோலிட்டர்
விமான ஏரிபொருளின் விலை கூட மத்திய அரசு பிப்ரவரி மாதத்தில் 214 ரூபாய் வரை உயர்த்தித் தற்போது 54,293.38 ரூபாய்க்கு (ஒரு கிலோலிட்டர்) விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி இதன் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதத்தின் முதல் நாள்
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்தின் முதல் நாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளைப் பொருத்து விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தும்.
டெல்லி விலை நிலவரம்
இந்நிலையில், டெல்லியின் விலை நிலவரப்படி மக்கள் ரீபில் சிலிண்டருக்கு 737 ரூபாய் அளிக்க வேண்டும், இதில் 303 ரூபாய் மானியமாக வங்கி கணக்கில் மத்திய அரசால் வைப்பு வைக்கப்படும். இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை 434 ரூபாய்.


Click it and Unblock the Notifications