மார்ச் 31க்குள் அனைவருக்கும் மொபைல் பேங்கிங் சேவை.. மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவு..!
டெல்லி: இந்தியாவில் வங்கிகளில் இருக்கும் அனைத்துச் சேமிப்புக் கணக்குகளுடன் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து மார்ச் 31, 2017க்குள் அனைவருக்கும் மொபைல் வங்கி சேவை அளித்திட வேண்டும் என மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை அனைவங்கிகளும் ஒரு பிரச்சார முறையில் செயல்படுத்தவும் மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆதார்.. மொபைல் எண்..
சேமிப்புக் கணக்கில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டால், அனைவராலும் ஆதார் வாயிலான AEPS பணப் பரிமாற்ற முறையை எளிதாகப் பெற முடியும்.
இதுவே மத்திய அரசின் திட்டம்.
புதிய கட்டணங்கள்
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கட்டணங்கள் கூடப் பணம் வாயிலாகப் பரிமாற்றத்திற்கானது மட்டுமே.
இதன் மூலம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்படுவதை உறுதி செய்துள்ளது.
65 சதவீத கணக்குள்
தற்போதைய நிலையில் இந்திய வங்கிகளில் இருக்கும் 65 சதவீத சேமிப்புக் கணக்குகளில் மொபைல் எண், 50 சதவீத கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்
65 சதவீத மொபைல் எண் இணைக்கப்பட்ட கணக்கில் வெறும் 20 சதவீத கணக்குகளுக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் சேவையைச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை உடனடியாகச் செயல்படுத்தவும் மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications