ஜியோவுக்கு போட்டியாக வோடாபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்கள்.. அப்படியென்றால் எது பெஸ்ட்!
தொலைத்தொடர்பு துறையில் இலவசங்களை அள்ளி வீசி தனது போட்டி நிறுவனங்களிடம் இருந்து பெறும் பகையை சம்பாதித்துக் கொண்டது ஜியோ.
ஜியோவின் இலவச சலுகை ஆஃபர்கள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் நிலையில் ஐடியா, வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஜியோவிற்கு நிகரான விலையில் இலவச அழைப்புகள், தரவுகள் உள்ளிட்டவற்றை அளிக்கத் துவங்கியுள்ள நிலையில் நாம் இங்கு இதில் எது பெஸ்ட் ஆஃபர் என்று இங்குப் பார்ப்போம்.
ஐடியா ஆஃபர்
ஐடியா நிறுவனம் 348 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு வரம்பில்லா குரல் அழைப்புகள் மற்றும் 500 எம்பி இலவச தரவை அளிக்கின்றது.
வோடாபோன் ஆஃபர்
வோடாபோன் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 342 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதம் 28 ஜிபி தரவும், அதில் ஒரு நாளைக்கும் 1 ஜிபி வரம்பு எனவும் அளிக்கின்றது. அதே நேரம் மற்றொரு திட்டத்தில் 346 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு 10 ஜிபி தரவும் வரம்பில்லா குரல் அழைப்புகளும் செய்துகொள்ளலாம்.
இந்த திட்டங்கள் குறித்து விளம்பரங்களை வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் மற்றும் தகவல்கள் மூலம் தெரிவித்து வருகின்றது.
ஏர்டெல்
எர்டெல் நிறுவனம் 349 ரூபாய்க்கு அறிவித்துள்ள ரீசார்ஜ் பேக்கில் ஒரு மாதத்திற்கு 28 ஜிபி தரவு ஆனால் ஒரு நாளைக்கு 1 ஜிபி என்ற வரம்பு அதிலும் பகலில் 500 எம்பி மற்றும் இரவில் 500 எம்பி தரவாக பிரித்துப் பயன்படுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் தங்களது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மர்ச் 13 முதல் பல அதிரடி இலவச சலுகைகளை அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
ஜியோ
இந்திய தொலைத்தொடர்பு துறையில் இந்த அளவிற்குப் போட்டி நிலவ முக்கிய காரணம் முகேஷ் அம்பானியின் ஜியோ இலவச ஆஃபர்களை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணங்களை விதிக்க முடிவு செய்துள்ளதே என்றும் கூறலாம். வணிக ரீதியிலான சேவையை அளிக்கத் துவங்கிய குறைந்த காலத்தில் இலவசங்களை அளித்து 100 மில்லியன் பயனர்களை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. ஜியோ நிறுவனம் 2020-ல் 50 சதவீத சந்தையை பிடிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஜியோ பிரைம் ஆஃபர்
விரைவில் ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகைகள் முடிவடையும் நிலையில் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு பிரைம் பயனர்களாக மாறலாம் என்றும், இதனைத் தொடர்ந்து மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பில்லா எஸ்எம்எஸ், குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரம்புடன் 28 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். இதுவே கூடுதல் தரவு வேண்டும் என்றால் பூஸ்டர் போக்குகளும் உண்டு.
அதே போன்று 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்க 2 ஜிபி வரம்புடன் 28 நாட்களுக்கு 56 ஜிபி தரவை வழங்குகின்றது.
பிரைம் உறுப்பினர்களுக்கான 99 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது வரம்பில்லா குரல் அழைப்புகள் மற்றும் 1 ஜிபி தரவு 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
எது பெஸ்ட்
ஜியோவுடன் பிற நிறுவனங்களின் திட்டங்களையும் ஒப்பிடும் போது பெரிதாக விலையில் வித்தியாசம் இல்லை என்றே தென்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications