வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க உள்ள கூடுதல் விதிகளுக்கன கட்டண விவரங்கள்..!
வங்கி கணக்கில் பணம் எடுக்க இருக்கும் இலவச வரம்புகள் மட்டும் இல்லாமல் வங்கிகள் நிதி பரிவர்த்தனைகள் இல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பணம் பிடிக்கின்றன என்று தெரியுமா?
ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் போது இலவச முறைகளை மீறி பணம் எடுக்கும் போது 20 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும். நிதி இல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 8.50 கட்டணமாகப் பிடிக்கப்படும்.
நிதி இல்லாத பரிவர்த்தனைகள் என்றால் வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகையைச் சரி பார்த்தல், குறு அறிக்கை எடுப்பது, ஏடிஎம் கார்டு பின் நம்பர் மாற்றுவது, வங்கி ஸ்டேட்மெண்ட் போன்றவற்றுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த வாரம் முதல்
எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் குறைந்தது 5 ரூபாய் முதல் 150 வரை குறிப்பிட்ட வரம்பை மீறி பணப் பரிமாற்றமாகச் செய்யும் போது கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளன.
இதில் சில வங்கிகள் மார்ச் 1 முதலும், சில வங்குகள் ஏப்ரல் 1 முதலும் இந்தக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளன.
சம்பள கணக்குகள்
மேலே கூரிய விதிகள் சேமிப்புக் கணக்குகள் மட்டும் இல்லாமல் சம்பள வங்கி கணக்குகளுக்கும் பொருந்தும்.
மைனர் மற்றும் மூத்த குடிமக்கள்
எச்டிஎப்சி வங்கியைப் பொருத்த வரை மைனர் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பணம் எடுக்கும் போது கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மூன்றாம் கட்சி பரிமாற்றங்கள்
மூன்றாம் கட்சி பரிமாற்றங்கள் 25,000 ரூபாய்க்கும் அதிகமாக அனுமதிக்கப்படாது. அதே நேரம் 25,000 ரூபாய் மூன்றாம் கட்சி பரிமாற்றத்திற்குப் பரிவர்த்தனை கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications