ஈகாமர்ஸ் சந்தையில் தனியாக கலக்கும் 'ஷாப்குளுஸ்'.. முக்கிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!
மும்பை: இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டும், உயர் அதிகாரிகள் வெளியேறி வரும் இன்றைய நிலையில் ஷாப்குளுஸ் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் படி இந்நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்க ஷாப்குளுஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2 அதிகாரிகள்
ஷாப்குளுஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகக் குழுவை மேலும் வலிமையாக்க ஹர்நீத் சிங்-ஐ நிறுவனத்தின் துணை தலைவராகவும், மார்கெட்டிங்க பிரிவின் தலைவராகவும் ஷாப்குளுஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாபு விட்டால் அவர்களை மனிதவள (HR) பிரிவின் தலைவராக நியமிக்க ஷாப்குளுஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
லாபம்...
இப்புதிய நியமனங்கள் மூலம் ஷாப்குளுஸ் நிறுவனம் லாபத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறது என ஷாப்குளுஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரியான ராதிகா அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் தங்களுக்கான துறையில் மிகப்பெரிய அளவிலான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களின் தேர்வு நிறுவனத்தின் பல முக்கிய வளர்ச்சி பணிகளையும், லாபத்தை அளிக்கும் என நம்புகிறேன் என்று ராதிகா அகர்வால் கூறினார்.
வரலாறு..
ஹர்நீத் சிங், ஷாப்குளுஸ் நிறுவனத்திற்கு முன் ZOPPER என்னும் எலக்ட்ரானிக் விற்பனை தளத்தில் தலைமை வர்த்தக அதிகாரியாகச் செயல்பட்டார். அதற்கு முன் டாமினோஸ் பிட்சா இந்தியாவின் மார்கெட்டிங் பிரிவின் உயர் துணை தலைவராக இருந்தார்.
முக்கியப் பணிகள்
இப்புதிய பதவியில் ஹர்நீத் சிங், இந்தியா மற்றும் வெளிநாடகளில் நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் மார்கெட்டிங் திட்டங்கள் மற்றும் பிராண்டு உருவாக்கம் ஆகியவற்றைச் செயல்படுத்த உள்ளார்.
இதை ஆன்லைன், ஆப்லைன், மொபைல், டிஜிட்டல் மற்றும் கூட்டணி முயற்சிகளை எனப் பலவற்றின் வாயிலாக இதனைச் செய்யத் திட்டமிட்டு வருகிறது ஷாப்குளுஸ் நிறுவனம்.
பாபு விட்டல்
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் டிசைன் திங்கர் என்ற சான்றிதழ் பெற்றுள்ள பாபு விட்டல் XLRI கல்லுரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இவர் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.
2016ஆம் ஆண்டு ஷாப்குளுஸ் நிறுவனத்தில் சேரும் முன்னர்ப் பாபு விட்டல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனத்தை மனிதவள பிரிவின் முக்கியத் தலைவர் பதவிகளில் பணியாற்றினார்.
ராதிகா அகர்வால்
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் தொடர்ந்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், ஷாப்குளுஸ் நிறுவனம் மட்டும் சிறப்பான முறையில் இயங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications