ஐபிஎல் ஸ்பெஷல்: 1,300 கோடி ரூபாய் இலக்குடன் சோனி பிச்சர்ஸ்.. ஏப்.5 முதல் வேட்டை ஆரம்பம்..!

ஐபிஎல் ஸ்பெஷல்: 1,300 கோடி ரூபாய் இலக்குடன் சோனி பிச்சர்ஸ்.. ஏப்.5 முதல் வேட்டை ஆரம்பம்..!

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிகெட் போட்டிகள் ஏப்ரல் 5ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த வருடம் விளம்பரத்தின்மூலம் 1,300 கோடி ரூபாய் அளவிற்கு விளம்பர வருவாயை ஈட்ட வேண்டும் என்று இலக்கை நிர்ணயம் செய்து உள்ளதுசோனி பிச்சர்ஸ் நெர்வொர்க் இந்தியா.

ஐபிஎல் போட்டிகளின் ஆஸ்தான ஒளிபரப்பாளரான சோனி, ஐபிஎல் 2017க்காக இந்த வருடம் கூடுதல் ஸ்பான்ஸராகவோல்டாஸ், ஹெவெல்ஸ் மற்றும் மேக்மை டிரிப் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்திய மக்கள் மத்தியில் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டுவரும் நிலையில், இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் ஈர்ப்பையும் நிறுவனங்கள் பார்க்கதுவங்கியுள்ளது.

இதனால் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுக்கிறது.

 

12 நிறுவனங்கள்

12 நிறுவனங்கள்

இந்தப் போட்டி மிகுந்த சந்தையில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் திறன்படப் பயன்படுத்திக்கொள்ளும்கார்பரேட் நிறுவனங்களுக்கு ஐபிஎல் போட்டிகள் மட்டும் என்ன விதிவிலக்கா..?

ஐபிஎல் 2017 போட்டிகளுக்கு இதுவரை ஸ்பான்சராக சுமார் 12 நிறுவனங்கள் இணைந்துள்ளது. இதில் வோல்டாஸ், ஹெவெல்ஸ் மற்றும் மேக் மை டிரிப் ஆகியவையும் அடக்கம்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இந்த முறை முக்கிய ஸ்பான்சராகச் சீனா மொபைல் நிறுவனமான விவோ, மொபைல் சேவை நிறுவனமான வோடபோன், ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், இணை ஸ்பான்சராகச் சியட் டையர், விமல் பான் மசாலா, யமஹா மோட்டார்ஸ், பார்லே அக்ரோ ப்ரூரி, யெஸ் வங்கி மற்றும் பாலிகேப் ஆகியவை இணைந்துள்ளது.

ரோஹித் குப்தா

ரோஹித் குப்தா

ஐபிஎல் கிரிகெட் போட்டிகளில் இந்த வருடம் பேமென்ட் கேட்வே, ஆட்டோமொபைல், எப்எம்ஜிசி எனப் பல துறைகளில்இருந்து 12 நிறுவனங்கள் விளம்பர ஸ்பான்சராக இணைந்துள்ளது எனச் சோனி பிச்சர்ஸ் நெர்வொர்க் இந்தியாவின்நெர்வொர் விற்பனை மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் தலைவரான ரோஹித் குப்தா தெரிவித்தார்.

ஸ்பாட் பையர்ஸ்

ஸ்பாட் பையர்ஸ்

ஸ்பாட் பையர்ஸ் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ, மொபைல் விற்பனை நிறுவனமான ஓப்போ ஆக்கிய நிறுவனங்கள் இணைஸ்பான்சராக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் மொத்த விளம்பர விற்பனையில் சுமார் 75 சதவீதத்தைச் சோனி இந்தியா விற்பனை செய்துள்ளது.

 

விலையும் வாய்ப்பும்

விலையும் வாய்ப்பும்

கடந்த வருடப் போட்டிகளில், ஸ்பாட் பை (Spot Buy)க்காக நிறுவனங்கள் கேட்ட நிலையில், எங்களிடம் அதற்கானசேவைகள் இல்லை. இந்த வருடம் அதற்கான சேவைகள் கொண்டு வரப்பட்டு மொத்த விளம்பர வாய்ப்புகளில் 15-20 சதவீதத்தை ஸ்பாட் பை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

ஸ்பாட் பை-க்காகத் தொகையை 10 நொடிகளுக்கு 6,25,000 ரூபாயாகவும் சோனி உயர்த்தியுள்ளது என ரோஹித் குப்தாகூறினார்.

 

விலை நிலவரங்கள்

விலை நிலவரங்கள்

ஐபிஎல் 2017 போட்டிகளுக்காகச் சோனி இந்தியா நிர்ணயம் செய்துள்ள விலைப்பட்டியல்.

ஸ்பாட் பை - ரூ.6 லட்சம்/10 நொடிகள்
எச்டி பீட்ஸ் - ரூ.2 லட்சம்/10 நொடிகள்
கோ ஸ்பான்சர் - ரூ.5.2 லட்சம்/10 நொடிகள்
அசோசியேட் ஸ்பான்சர் - ரூ.5.75 லட்சம்/10 நொடிகள்

 

ஐபிஎல் 2016

ஐபிஎல் 2016

கடந்த ஆண்டில் நடந்த போட்டிகளில் சோனி இந்தியா 12 ஸ்பான்சர்களை வைத்துக்கொண்டு சுமார் 1,100 கோடி ரூபாய்வரையிலான விளம்பர வருவாயைப் பெற்றது.

இந்த வருடம் பல புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் சுமார் 1,300 கோடி ரூபாய் அளவிலானவருமானத்தைப் பெற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது சோனி இந்தியா.

 

துவக்கம்..

துவக்கம்..

ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்ட நாள் முதல் ஆதாவது 2008ஆம் ஆண்டில் இருந்து கடந்த 10 வருடமாக விளம்பர ஒளிபரப்பாளராக இயங்கி வருகிறது.

தமிழக வீரர்..!

தமிழக வீரர்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+