6 மணி நேரம் வேலை.. தினமும் 2,500 ரூபாய் வரை சம்பளம்..!
சென்னை: கம்பியூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து கடுப்பாக உள்ளதா.. இந்தக் கதையைக் கேட்டால் வெறுப்பு இன்னும் அதிகமாகலாம்.
ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் பல போட்டிகள், எதிர்ப்புகளைத் தாண்டி இந்திய சந்தைக்குள் நுழைந்தது உபர் நிறுவனம். இந்நிறுவனம் வெளியிட அறிக்கையில், உபர் நிறுவன ஓட்டுனர்கள் ஒரு நாளுக்கு 2,500 ரூபாய் வருமானம் பெறுவதாகக் கூறியுள்ளது. அடேங்கப்பா..!!!!
ஒரு மாதத்திற்கு 30 நாள்*2,000 ரூபாய் (தோராயமாக)= 50,000 வருமானம் பெறுகின்றனர்.
குழப்பங்கள்
டாக்ஸி நிறுவனங்கள் வந்த பின்னர் டாக்ஸி டிரைவர்களின் சம்பளம், அவர்களது ஊக்கத் தொகை எவ்வளவு எனப் பல்வேறு விதமான கேள்விகள் எழுந்த நிலையில், உபர் நிறுவனம் அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
80 சதவீத ஓட்டுனர்கள்
உபர் நிறுவனத்தின் இணைந்துள்ள டிரைவர்களில் 80 சதவீதம் பேர் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் வேலை செய்து தினமும் 1,500 முதல் 2,500 ரூபாய் வரையிலான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்று உபர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் இந்தத் தொகை சேவைக் கட்டணத்தைப் பெறப்பட்ட பிந்தைய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகமும் வளர்ச்சியும்
கடந்த 3 வருடத்தில் உபர் நிறுவனத்தின் இந்திய சந்தையில் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நிறுவனத்தில் இணைந்துள்ள ஓட்டுனர்களின் வருமானமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் உபர் நிறுவனத்தில் ஓட்டுனர்களின் இணைப்புச் சராசரியாக 60 சதவீதம் வரை அதிகரித்து வருவதாகவும் உபர் இந்தியா பிரிவின் தலைவரான அமித் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஊக்கத் தொகை
ஓட்டுனர்களுக்கு, பயணிகள் செலுத்தப்படும் தொகையின் வாயிலா ஊக்கத்தொகை கிடைக்கும். இதுமட்டும் அல்லாமல் ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட டிரிப்புகளை ஒரு ஓட்டுனர் செய்து விட்டால் அவர்களுக்கு நிறுவனத்தின் வாயிலாகக் கூடுதல் ஊக்கத் தொகை அளிக்கப்பட உள்ளது.
புதிய நகரம்
புதிய நகரங்களில் சேவையைத் துவங்கும் போது ஒட்டுனர்களுக்குப் பிரத்தியேகமான சலுகை மற்றும் கூடுதல் ஊக்க தொகையும் அளிக்கப்படுகிறது என்று உபர் தெரிவித்துள்ளது.
ஓட்டுனர்கள் முக்கியத்துவம்
நிறுவனத்தின் வருவாய்க் குறைந்தாலும் ஒட்டுனர்களின் ஊக்கத் தொகையில் நிறுவனம் சிறப்பான சேவையை வழங்குகிறது. இதனால் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அமித் கூறினார்.
பிற நிறுவனங்கள்
உபர் நிறுவனத்தைப் போன்றே ஓலா போன்ற பிற நிறுவனங்களும் ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் வருமானம் குறித்த தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications