ஐடி நிறுவனங்கள் மிட்லெவல் ஊழியர்களை குறிவைப்பது ஏன்..?

கேள்விக்குறியாக நிற்கும் 'ஐடி' ஊழியர்களின் எதிர்காலம்..?

இன்று ஐடி நிறுவனங்கள் தனது முக்கிய வர்த்தக சந்தையான, சரியாக சொல்லவேண்டும் என்றால் 60 சதலீதம் வருவாய் அளிக்கும் அமெரிக்க சந்தையில் விசா பிரச்சனை, டிரம்ப் இன் புதிய கட்டுப்பாடுகள், பை அமெரிக்கன் ஹயர் அமெரிக்கா ஒப்பந்தம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இதுஒரு புறம் இருக்க வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வரவுசெலவு கணக்கை லாபமாக காட்டவதில் தற்போது ஐடி நிறுவனங்கள் சிக்கிக்கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே தற்போது ஐடி நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் மிட் லெவல் ஊழியர்கள் அதாவது 10 முதல் 20 வருடம் அனுபவம் பெற்ற ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இவர்களை தனியாக குறிவைக்க என்ன காரணம்..?

புதிய டெக்னாலஜி

புதிய டெக்னாலஜி

பல ஆண்டுகளுக்குப் பின், வருமானத்தை ஈட்ட வேறு வழியே இல்லாத காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளின் தேவையை உணர்ந்து புதிய டெக்னாலஜிகளுக்குள் நுழைந்துள்ளது.

இது உண்மையிலேயே இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமான ஒன்றாக இருந்தாலும், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சிறப்பான சேவையை அளிக்கவும் ஆட்டோமேஷன் என்ற ஒன்றையும் ஐடி நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளது.

 

வேலைவாய்ப்புகள் குறையும்

வேலைவாய்ப்புகள் குறையும்

ஆட்டோமேஷன் பயன்பாட்டின் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் வேலைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பிராஜெக்ட்-க்கு தற்போது 10 பேர் தேவை என்றால் ஆட்டோமேஷன் செய்த பின் 4-5 பேர் இருந்தால் போதுமானது.

இதுவே ஆட்டோமேஷன் பாதிப்பின் எதிரொலி.

 

மிட் லெவல் ஊழியர்கள்

மிட் லெவல் ஊழியர்கள்

இந்திய ஐடி நிறுவனங்களின் இந்த மாற்றத்தில் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளது மிட் லெவல் ஊழியர்கள் தான்.

இந்திய ஐடி நிறுவனங்களின் இப்பிரிவினரின் எண்ணிக்கை 1.4 மில்லியன் இவர்களது அனுபவம் 8-12 வருடங்கள் இருக்கும், சம்பளமும் 12-18 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும்.

 

மாற்றங்களில் சிக்கல்..

மாற்றங்களில் சிக்கல்..

இப்பிரிவில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் அணியின் அல்லது பிராஜெட்-இன் முக்கியப் பதவிகளிலும், மேனேஜர்கள் அளவில் இருக்கும் காரணத்தால் கடந்த 10 வருடங்களாக ஓரே துறையைச் சார்ந்த பணிகளைச் செய்து வந்திருப்பார்கள்.

இதனால் நிறுவனங்கள் புதிய டெக்னாலஜிகளுக்குத் திடீரென மாறும்போது இவர்களது பணியும் திறமையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் காரணத்தினால் இவர்களது வேலைவாய்ப்புத் தற்போது மிகப்பெரிய பாதிப்பில் உள்ளது.

 

புதுப்பிப்புகள்

புதுப்பிப்புகள்

தற்போதைய நிலையில் மிட் லெவல் ஊழியர்கள் அனைவரும் தங்களது நிறுவனத்திற்கு ஏற்ற அல்லது சந்தையில் தேவைப்படும் புதிய டெக்னாலஜிகளைக் கற்கவும், அதில் அதிகளவிலான அறிவைப் பெற வேண்டும்.

இல்லையெனில், தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் வரலாறு காணாத வகையில் மறுசீரமைப்பு பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணிகளில் நீங்களும் பலி ஆகலாம்.

 

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி சந்தையில் ஒருவர் எத்தனை ஊழியர்களை மேற்பார்வை செய்கிறார் என்பதே பார்க்கிறது, அவர் எந்த டெக்னாலஜிகளில் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பார்ப்பதில்லை என்று இத்துறை சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே தற்போது மிட் லெவல் ஊழியர்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

எல்லா டெக்னாலஜி நிறுவனங்களும் புதுமைகளுக்காகக் கன்சல்டன்ட் நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை அளிக்கிறது. அனைத்து ஆய்வுகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் மிட் மேனேஜ்மென்ட் உடைந்துள்ளது. மோசமான மிட் மேனேஜ்மென்ட் உள்ளது எனக் கூறுவார்கள், என்று இன்போசிஸ் சிஇஓ விஷால் சிக்கா ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் மிட் மேனேஜ்மென்ட் இந்தப் பாதிப்புகளுக்கு எவ்விதமான காரணமுமில்லை, இந்திய ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் அமைப்பில் வெளியுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு பிரிவினர் என்றால் இது மிட் மேனேஜ்மென்ட் பிரிவு தான் என்று சிக்கா கூறினார்.

 

பாரம்பரியம் உடைந்தது..

பாரம்பரியம் உடைந்தது..

ஆட்டோமேஷன், டிஜிட்டல் டெக்னாலஜிஸ் ஆகியவை இந்திய ஐடி நிறுவனங்களின் இயல்பான வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கான மாற்றத்தையே நாம் தற்போது பார்த்து வருகிறோம்.

10 வருட அனுபவம்

10 வருட அனுபவம்

இந்திய ஐடி சந்தையில் 10 வருடங்கள் அனுபவம் கொண்டு ஒருவரின் வேலைவாய்ப்புத் தற்போது இயந்திரங்களிடம் கொடுக்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா.. ஆனால் அது தான் உண்மை.

கேப்ஜெமினி முதல் இன்போசிஸ் வரை..

கேப்ஜெமினி முதல் இன்போசிஸ் வரை..

ஐரோப்பிய சந்தையின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான மேப்ஜெமினி பிராஜெக்ட்களை யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்யத் தற்போது ஐபிஎம் காக்னிடிவ் கன்சல்டிங் டூல் ஆன வாட்சன்-ஐ பயன்படுத்துகிறது.

அதேபோல் இப்போது தற்போது புதிய மெஷின் லேர்னிங் பிளாட்பார்மை உருவாக்கிவருகிறது.

 

முக்கிய ஊழியர்கள்..

முக்கிய ஊழியர்கள்..

இத்தகைய மோசமான சூழ்நிலையிலும், ஐடி நிறுவனங்கள் திறன் வாய்ந்த ஊழியர்களை நிறுவன பணிகளில் தக்கவைத்துக்கொள்ள அதிகளவிலான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதற்காகவும் அதிகளவிலான சம்பள உயர்வை அளிக்கவும் ஐடி நிறுவனங்கள் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

சமீபத்தில் டெக் மஹிந்திரா நிறுவனம் கூடத் தங்களது மிட் லெவல் ஊழியர்களுக்கான சம்பளத்தை 6 மாதங்கள் அளிக்க மறுத்துள்ளது.

இத்தகைய நிலை இந்திய ஐடி நிறுவனங்களில் மேலும் மோசமடைய அதிக வருடங்கள் இல்லை.சில மாதங்களே உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+