10 கோடி செலவழித்து 275 கோடி சம்பாதித்த அனில் அம்பானி..!
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் பேடிஎம்-ல் முதலீடு செய்திருந்து 1 சதவீத பங்கை சீனாவின் அலிபாபா நிறுவனத்திற்கு 275 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.
பேடிஎம் நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 10 கோடி ரூபாய் கொடுத்து 1 சதவீத பங்கை தனது வசம் வைத்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தால் பேடிஎம் நிறுவனத்திற்கு 4 பில்லியனுக்கும் அதிகமாக மதிப்பு உருவாகியுள்ளது, பேடிஎம் நிறுவனத்தில் ஏற்கனவே முதன்மை முதலீட்டாளராக அலிபாபா குழுமம் இருக்கின்றது.
கருத்து தெரிவிக்க மறுப்பு
இது குறித்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் பேடிஎம் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர்கள் இருவரும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முதலீடுகள்
ஏற்கனவே ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் பிற நிறுவனங்களில் உள்ள தங்களது முதலீடுகளைக் குறைத்துக்கொண்டே வருகின்றது.
ஒன்97 கம்யூனிகேஷன்
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஜய சேகர் ஷர்மா தன்னிடம் உள்ள பங்குகளில் இருந்து 1 சதவீதத்தை ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு 325 கோடி நிதி திரட்டப்பட்டதற்காக அளித்திருந்தார்.
பேமெண்ட்ஸ் வங்கி முதலீடு
ஒன்97 கம்யூனிகேஷன் அளித்த நிதியை வைத்துப் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கான முதலீட்டிற்காகப் பெடிஎம் பயன்படுத்தியுள்ளது.
பேடிஎம் மார்க்கெட் பிலேஸ்
சிங்கப்பூர் அலிபாபா இ-காமர்ஸ் எஸ்ஏஐஎப் உடன் இணைந்து பேடிஎம் இணையதள மார்க்கெட் பிலேஸ் பிரிவுக்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications