ஏர் ஏசியாவுக்கு போட்டியாக 1,330 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்தது ஜெட் ஏர்வேஸ்..!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானப் பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளநாட்டு விமானப் பயணங்களில் எகானமி வகுப்பு டிக்கெட்களை 1330 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.
இது ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ள ஹோலி சலுகை விலையான 1499 ரூபாய்க்குப் போட்டியாகவே உள்ளது. ஜெட் ஏர்வேஸ் இந்தச் சலுகை ஆஃபரை எப்போதும் இல்லாத சலுகை விலை என்று அறிவித்துள்ளது.
எப்படி டிக்கெட் புக் செய்வது
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை ஜெட்ஏர்வேஸ்.காம் அல்லது மொபைல் செயலி மூலமாக மட்டுமே பெற முடியும் என்று இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
டிக்கெட் புக் செய்ய உள்ள கட்டுப்பாடுகள்
சலுகை விலை டிக்கெட்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேரடியாகச் செல்லும் விமானங்களுக்கு மட்டுமே அளிக்கின்றது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் 20 நாட்களுக்கு முன்பே டிக்கெட்களைப் புக் செய்வதற்கு மட்டுமே இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் அளிக்கப்படும்.
சலுகை விலையில் குறைந்த அளவே டிக்கெட்கள் உள்ள நிலையில் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஏர் ஏசியா ஆஃபர்கள்
1,499 ரூபாய் டிக்கெட் விலையில் ஹைதராபாத்-பெங்களுர் வரை செல்லலாம். மேலும் பூனே, ஸ்ரீநகர் போன்ற வழித்தடங்களிலும் ஆஃபர் விலையில் பயணம் செய்ய முடியும்.
இம்பாலில் இருந்து கவுகாத்தி செல்ல 1,999 ரூபாய் எனவும், பூனேயில் இருந்து ஜெய்ப்பூர் வரை 2,999 எனவும், பூனேவில் இருந்து பெங்களூரு மற்றும் விஷாகபட்டினம் முதல் பெங்களூரு வரை செல்ல 2,399 ரூபாய் விலையிலும் விமானப் பயணம் செய்யலாம்.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்களும் அண்மைக்காலங்களில் பல விதமான அஃபர்களை அறிவித்துள்ளன. இதனால் இந்தியா விமானப் போக்குவரத்தின் டிராப்பிக்கும் அதிகரித்துள்ளது.
ஏர் ஏசியா இந்தியா வெளிநாட்டு விமானப் பயணங்கள்
ஏர் ஏசியா இந்தியா 2017 அறையாண்டு முதல் வெளிநாட்டு விமானச் சேவைகள் வழங்க இருக்கின்றது. இந்த ஆண்டு 14 புதிய விமானங்களையும் 2018 இறுதிக்குள் 6 விமானங்களையும் சேவை அளிக்க வாங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications