1 ரூபாய் மிட்டாய் விற்பனையில் 300 கோடி வருமானம்.. கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்த 'பல்ஸ்'..!
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை என்றால் இது இந்தியா தான். இந்தியா சந்தையில் ஒரு பன்னாட்டு நிறுவனம் தனது வர்த்தகத்தைத் துவங்குகிறது என்றால் ஒரு சில வருடங்களின் அதன் வருவாய் மற்றும் வர்த்தகம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கும். தோல்வி அடைந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.
இதுவே இந்திய நிறுவனமாக இருந்தால் இதன் வாய்ப்புகளைச் சொல்ல தேவையே இல்லை. இந்த வகையில் பல்ஸ் என்னும் மிட்டாய் இந்திய சந்தையில் கடந்த 2 வருடத்தில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தால் கார்பரேட் நுகர்வோர் நிறுவனங்கள் முடிங்கி கிடக்கும் நிலையில் இந்த நிறுவனத்தின் வெற்றி அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
டிஎஸ் குருப்
ரஜினிகாந்தா பான் மசாலா, கேட்ச் பாடில் தண்ணீர் ஆகியவற்றைத் தயாரித்த டிஎஸ் குருப் 2015 மத்தியில் பில்ஸ் என்னும் மாங்காய்ச் சுவைக்கொண்ட மிட்டாயை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
வெறும் 1 ரூபாய் மதிப்புடைய இந்த மிட்டாய் அறிமுகம் செய்து 2017 பிப்ரவரி மாதம் 2 வருடங்கள் நெருங்கிய நிலையில், 300 கோடி ரூபாய் என்ற இமாலய விற்பனை அளவை எட்டியுள்ளது.
பதஞ்சலி
இந்திய நுகர்வோர் சந்தையில் பதஞ்சலி நிறுவனத்தின் அறிமுகம் மற்றும் அதன் தாக்கங்கள் கார்பரேட் நிறுவனங்களின் வர்த்தகத்தை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனது எனக் கடுமையான எதிர்ப்புகளைக் கிளப்பி வரும் நிலையில், டிஎஸ் குருப் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
இந்திய நுகர்வோர் சந்தையில் இருக்கும் ஓரியோ, மார்ஸ் பார் நிறுவனங்கள் கூடக் கடந்த 2 வருடத்தில் 300 கோடி ரூபாய் என இலக்கை அடையவில்லை.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓரியோ, மார்ஸ் பார் கடந்த 5 வருடங்களாக வர்த்தகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோகோ கோலா
தமிழ்நாட்டில் இதைத் தடை செய்யப்பட்டாலும் உலகம் முழுவதில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் கோகோ கோலா 2014ஆம் ஆண்டுக் கோக் ஜீரோ -வை அறிமுகம் செய்யது கடந்த 2 வருடத்தில் வெறும் 120 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகச் சந்தையை மட்டுமே பெற்றுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய நுகர்வோர் சந்தையில் பல்ஸ் மிட்டாய்-யின் விற்பனை வெற்றி கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது.
வளர்ச்சி
இனிப்பு மிட்டாய் சந்தை இந்தியாவில் கடந்த வருடத்தை விட 2016ஆம் நிதியாண்டில் 12-14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் இப்பிரிவின் ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு 6,600 கோடி ரூபாய்.
போட்டி
சந்தையில் வர்த்தகத்திற்கு இறங்கி 2 வருடங்களே ஆன நிலையில் டிஎஸ் குருப் நிறுவனத்தின் பல்ஸ் மிட்டாய், பார்லே மேங்கோ பைட், Alpenliebe ஆகியவற்றுடன் சரிசமமாகப் போட்டி போடுகிறது. இது டிஎஸ் குருப் நிறுவனத்திற்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
பார்லே மேங்கோ பைட், Alpenliebe ஆகியவை இந்தியாவில் 10 வருடங்களுக்கும் அதிகமான வர்த்தக வரலாற்றைக் கொண்டுள்ளது.
வரிவாக்கம்
இந்திய சந்தையில் வெற்றி முத்திரையைப் பதித்த பல்ஸ், சிங்கப்பூர், அமெகிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்ய டிஎஸ் குரூப் திட்டமிட்டு வருவதாத இந்நிறுவனத்தின் உயர் துணை தலைவர் சஷாங்க் சுரானா தெரிவித்தார்.
உண்மை
இனி எந்தக் கார்பரேட் நிறுவனமும் வர்த்தகச் சரிவிற்காகப் பதஞ்சலியைக் காரணம் காட்ட முடியாது.
இந்தியர்கள் பொதுவாகச் சிறந்த பொருட்களுக்கு (காசுக்கு ஏற்றப் பொருளுக்கு) சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள், அந்த வகையில் தான் பல்ஸ் வெற்றிபெற்றுள்ளது. இதே நிலை தான் பதஞ்சலிக்கும், கேட்பெரி போன்ற அனைத்து நிறுவனங்களும்.


Click it and Unblock the Notifications