12 லட்ச ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது.. அருண் ஜேட்லி கருத்து..!
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் சுமார் 12 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்.24 வரை 11,64,100 புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய சந்தையில் புழக்கத்திற்கு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த காரணத்தால் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து இந்தியாவில் பணத் தட்டுப்பாட்டை ஒழிக்கப் பகுதி பகுதியாகப் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளிட்டு வந்தது.

இதன் படி தற்போது நாட்டில் பணத்தட்டுப்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. இந்தப் பணத் தட்டுப்பாட்டுக் காலகங்களில் மத்திய அரசு மக்களை டிஜிட்டல் வாயிலான பணப் பரிமாற்றத்திற்கு மாற்றப் பல முயற்சிகளைச் செய்ததது, செய்து வருகிறது.
சமீபத்தில் கூட வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் வரை வைக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய ரூபாய் நோட்டுகளின் வெளியீடு குறித்து லேக் சபாவில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டிசம்பர் மாதத்தில் நேரடி வரி வசூல் 1,40,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனக் கூறினார். கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் இதன் அளவு 1,35,660 ரூபாயாக இருந்தது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications