தண்ணீர், பால் அடுத்து இளநீர்: கோகோ கோலாவின் தொடர் அதிரடி..!

தண்ணீர், பால் அடுத்து இளநீர்: கோகோ கோலாவின் தொடர் அதிரடி..!

இந்தியாவில் அதிகச் சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் சில மாநிலங்களில் விற்பனைக்கு உள்ள சிக்கல்களால் விரைவில் பேக் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீர் பாணங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கோகோ கோலா.

அமெரிக்காவில் 2013-ம் ஆண்டு ஜிக்கோ என்னும் பெயரில் தேங்காய் தண்ணீரை விற்கும் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவில் சோதனை முயற்சியாகக் கோகோ கோலா நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்த இருக்கின்றது.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

உலகளவில் பேக் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீர் பாணங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, 2013-ம் ஆண்டு இந்தப் பாணங்களை அறிமுகப்படுத்திய ஜிக்கோ நிறுவனத்திற்குச் சந்தையில் நல்ல வேரவேற்பு கிடைத்து டாப் சிறந்த நிறுவனங்கள் பட்டியலுக்கு முன்னேறியது.

ஜிக்கோ

ஜிக்கோ

இப்போது கோகோ கோலா நிறுவனம் ஜிக்கோ நிறுவனத்தின் தேங்காய் தண்ணீர் தயாரிப்பை இந்தியாவில் சோதனை முயற்சியில் விற்பதற்காக இறக்குமதி செய்கின்றது என்று இது குறித்துத் தெரிந்த வணிக அதிகாரிகள் நமக்குத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சந்தை நிலை

தற்போதைய சந்தை நிலை

இது போன்ற பாணங்கள் முக்கிய என்றாலும் கோகோ கோலா நிறுவனங்கள் நுகர்வு மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளில் நாட்டில் பல சிக்கலில் உள்ளதால் சந்தையைப் பிடிப்பது சவாலான விஷயமாகவே இருக்கும் என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த கோகோ கோலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் ஏதும் அளிக்கவில்லை.

 

கோகோ கோலா மற்றும் பெப்ஸி

கோகோ கோலா மற்றும் பெப்ஸி

இந்தியாவில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்கள் நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில வணிகர் சங்கங்கள் வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்குப் பிறகு இளைஞர்களும் கோகோ கோலா மற்றும் பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களைப் பருக வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களும், இனி வெளிநாட்டு குளிர் பாணங்களைக் குடிக்கப்போவதில்லை என்று உறுதியும் எடுத்து வருகின்றனர்.

ஏ1 பால்

ஏ1 பால்

தேங்காய் தண்ணீர் போன்றே கோகோ கோலா நிறுவனம் ஏ1 குளிரூட்டப்பட்ட பால் விற்பனையிலும் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வணிகர் சங்கம் என்ன செய்யும்?

தமிழக வணிகர் சங்கம் என்ன செய்யும்?

இப்படித் தண்ணீர், குளிர்பானங்கள், பால் என அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வரும் நிலையில் இதையும் தமிழக வணிகர் சங்கம் எதிர்க்குமா விற்பனை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தேங்காய் விலை உயரும்

தேங்காய் விலை உயரும்

ஒருவேலை கோகோ கோலாவின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவில் தங்கலது நிறுவனங்களை மேலும் நிறுவும். இதன்மூலம் தேங்காய் விலை உயரும்.

மோடியின் கோரிக்கை

மோடியின் கோரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்களைப் பழரசங்கள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை விநியோகம் செய்யுமாறு 2014-ம் ஆண்டுக் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பேக் செய்யப்பட்டு இளநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள்

இந்தியாவில் பேக் செய்யப்பட்டு இளநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள்

கோகோ கோலா நிறுவனத்தைப் போன்று ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் இளநீர்களைப் பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+