விஸ்தராவின் இந்த ஹோலி ஆஃபர் விமானப் பயண டிக்கெட்களை மார்ச் 10-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை மார்ச் 30 முதல் அக்டோபர் 1 வரையிலான பயணங்களுக்கு டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தரா ஹோலி ஆஃபராக 999 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
விஸ்தராவின் இந்த ஹோலி ஆஃபர் விமானப் பயண டிக்கெட்களை மார்ச் 10-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை மார்ச் 30 முதல் அக்டோபர் 1 வரையிலான பயணங்களுக்கு டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
எனினும் இந்த ஆஃபர்களுக்கான டிக்கெட்களை 21 நாளுக்கு முன்பாகப் புக் செய்யும் போது மட்டுமே ஆஃபர் விலையில் டிக்கெட் புக் செய்ய முடியும்.
கோடைக்கால விடுமுறை பயணங்கள்
விஸ்தார நிறுவனம் விமானப் பயணிகள் இந்த ஆஃபரில் கோடைக்கால விடுமுறை பயணங்கள் செய்து மகிழலாம் என்றும் கோவா, போர்ட் பிளேர், லெஹ் (லடாக்), ஜம்மு, ஸ்ரீநகர், கொச்சி, கவுகாத்தி, அமிர்தசரஸ், புவனேஸ்வர் போன்ற நகரங்கள் மட்டும் இல்லாமல் அதே போன்ற தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களின் டிகெட்களுக்கும் ஆஃபர் அளித்துள்ளது விஸ்தார நிறுவனம்.
ஆஃபர் உள்ள வழித்தடங்கள்
| விமானங்கள் வழித்தடங்க | ஒரு வழி பயணகட்டணம் (ரூ.): |
|---|---|
| கவுகாத்தி-புவனேஸ்வர் | 999 |
| ஜம்மு-ஸ்ரீநகர் | 1,199 |
| தில்லி-லக்னோ | 1,549 |
| தில்லி-சண்டீகர் | 1,649 |
| கவுகாத்தி-கொல்கத்தா | 1,699 |
| தில்லி-அமிர்தசரஸ் | 1,799 |
| ஜம்மு-தில்லி | 1,899 |
| ஸ்ரீநகர்-தில்லி | 1,999 |
| தில்லி-அகமதாபாத் | 2,099 |
| தில்லி-மும்பை | 2,299 |
| தில்லி-ஹைதெராபாத் | 2,349 |
| தில்லி-கொல்கத்தா | 2,699 |
| தில்லி-பெங்களூரு | 2,999 |
| தில்லி-கவுகாத்தி | 2,999 |
| பெங்களூரு-கொல்கத்தா | 2,999 |
| தில்லி-லெஹ் (லடாக்) | 3.099 |
| தில்லி-புவனேஸ்வர் | 3.099 |
| தில்லி-கோவா | 3,299 |
| மும்பை-அமிர்தசரஸ் | 3,299 |
| போர்ட் பிளேர்- கொல்கத்தா | 3,399 |
| கொச்சி-தில்லி | 3.799 |
| தில்லி-போர்ட் பிளேர் | 6.499 |
முன்னுரிமை
விஸ்தரா நிறுவனம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அள்ளிக்கும் என்றும், குறைந்த அளவிலான டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் உள்ளன என்றும் அறிவித்துள்ளது.
விஸ்தரா நிறுவனம்
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான விஸ்தரா 19 வழித்தடங்களில் விமானச் சேவையை அளிக்கின்றது. 13 விமானங்களுடன் வாரத்திற்கு 500-க்கும் மேற்பட்ட பயணங்களை விஸ்தரா அளித்து வருகின்றது.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், ஜெட் நிறுவனங்களும் முறையே 1499 ரூபாய் மற்றும் 1399 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications