கடுப்பான வாடிக்கையாளர்களை 'கூல்' ஆக்கிய பேடிஎம்.. 2% சேவை கட்டணம் ரத்து..!
மார்ச்-8 தேதி முதல் கிரெடிட் கார்டு மூலமாகப் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றும் போது 2 சதவீதம் கட்டணம் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 2 சதவீத கட்டண அறிவிப்புத் திட்டத்தைத் திரும்பப் பெற்றது.
வாடிக்கையாளர்களை மனதில் வைத்துக்கொண்டு பேடிஎம் வாலெட்டில் கிரெடிட் கார்டு மூலமாகப் பணத்தை ஏற்றும் போது பெறப்படுவதாகக் கூறிய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம் என்று பேடிஎம் தனது பிலாகில் கூறியுள்ளது.
நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதால் நேர்மையாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகப் பேடிஎம் நிறுவனம் இந்த முடிவிற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பேடிஎம்
பேடிஎம் இணையதளம் அல்லது செயலியில் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது அல்லது ரீசார்ஜ் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகள் ஏதேனும் செய்யும் போது பலவகையான பணமளிப்பு முறையில் பணம் செலுத்த முடியும்.
அன்மையில் பேடிஎம் செயலி யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் என இரண்டு முறையில் பணம் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான மக்கள் பேடிஎம் பயன்படுத்திப் பணப் பரிவத்தனை செய்து வருகின்றனர்.
செல்லா ரூபாய் நோட்டு
மத்திய அரசு செல்லா ரூபாய் அறிவித்த பிறகு கட்டணம் ஏதும் இல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் பரிவர்த்தனை முறையை நவம்பர் மாதம் பேடிஎம் அறிமுகப்படுத்தியது. இதனால் பல லட்சம் வணிகர்கள் பேடிஎம் செயலியில் இணைந்து பயன்பெற்று வந்தனர்.
கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கிய சேவை
என்ன தான் வணிகர்கள் பேடிஎம் மூலம் பணம் பெற்று வந்தாலும் அதனை வங்கி கணக்கிற்கு மாற்றினால் தான் பணமாக எடுக்க முடியும். ஆனால் செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததில் இருந்து அதையும் பேடிஎம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கி வந்தது. இதனால் கடைக்காரர்கள், வணிகர்கள் எனப் பலர் தனிநபர் பேடிஎம் கணக்குகளைப் பயன்படுத்தியும் பணத்தைப் பெற்று வந்தனர்.
முறைகேடான வழியில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதன் விழைவு
இந்தக் கட்டணம் இல்லா சேவையைப் பலர் முறையான வழிகளில் பயன்படுத்தி வந்தாலும் சில முறைகேடான வழியிலும் பயன்படுத்த துவங்கினர். கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே சில வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றி அதனை வங்கி கணக்கிற்கு இலவசமாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்து பயன்படுத்தி வந்தனர்.
பேடிஎம் நிறுவனத்திற்கு நட்டம்
கிர்டிட் கார்டு பயன்படுத்தி என்ன பரிவர்த்தனை செய்தாலும் பேடிஎம் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இது வாலெட்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பும் போது கட்டணம் செலுத்த வேண்டு வரும். ஆனால் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தைப் பேடிஎம் வாலெட்டிற்கு ஏற்றி அதில் இருந்து வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்பும் போது பேடிஎம் இதனை நாட்களாகப் பணத்தை இழந்து வந்தது.
இதுவே பணத்தைப் பேடிஎம் வாலெட்ட் பயன்படுத்தி வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்பாமல் இணையதளம் மற்றும் செயலி பயன்படுத்தி மட்டும் பரிவர்த்தனை செய்யும் போதே நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கும்.
விதிமுறைகளில் திருத்தம்
எனவே இது போன்ற தவறான வழியில் பயன்படுத்தும் முறையைத் தடுப்பதற்காகத் தங்களது விதிமுறைகளில் பேடிஎம் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதனால் பேடிஎம் பயன்படுத்தி ஷப்பிங் செய்யும் போது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் ஏதும் இல்லை. இதுவே வாலெட்டில் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றும்போது 2 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் அறிவித்தது. ஆனால் அதை இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள்
கட்டண விதிப்புத் திரும்பப் பெற்றுள்ளதை அடுத்துப் பேடிஎம் நிறுவனம் புதிய இந்தச் சிக்கலைத் தவிர்க்க புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றது. கிரெடிட் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க புதிய அம்சங்களைக் கொண்டு வருவோம் என்று பேடிஎம் தனது பிலாகில் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிகமாகக் கட்டணம் இல்லாததால் பேடிஎம் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications