வரி, கட்டணம், அபராதங்களால் இந்தியர்கள் படும் பாடு..!
மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு மக்களுக்கு நல்லது செய்வதற்காகவா அல்லது மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை அதிகரிக்கவா என்று கேட்கும் வகையில் உள்ளது தற்போதைய இந்திய அரசு.
நாம் எதற்கெல்லாம் வரி செலுத்துகின்றோம், கடந்த சில வருடங்களாக எப்படியெல்லாம் தங்களது வருவாய்களை வரியாகவும், கட்டணமாகவும் இழந்து வருகின்றோம் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு சான்று.
வருமான வரி
2,50,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தனிநபர் வருமானம் பெறும் போது 5 சதவீதம் முதல் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் 2016-ம் ஆண்டு வரை 10 குறைந்த பட்ச வருமான வரியின் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது என்பது தான்.
செலவு செய்ய வரி
நாம் எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றோம் என்றால் அந்தப் பொருளின் விலையில் மறைமுக வரியையும் செலுத்தி வருகின்றோம்.
வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் கட்டணம்
நாம் ஒரு காலத்தில் வங்கி கணக்கில் பணத்தை எடுக்கக் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தி வந்தோம். இன்றோ 3 லட்சம் வரை தான் எடுக்க முடியும், அளவுக்கு அதிகமான முறை பணமாகப் பரிவர்த்தனை செய்தால் கட்டணம், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு.
பணத்தை வங்கி கணக்கில் செபாசிட் செய்யவும் கட்டணம்
இதில் உச்சவரம்பு என்னவென்றால் சில தனியார் வங்கிகள் பணம் எடுப்பது மற்றும் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிடி செய்வது என அணைத்திருக்கும் கட்டுப்பாடு. இவர்கள் அறிவித்துள்ள விரம்பை மீறி பணப் பரிமாற்றம் செய்தால் பணத்தை டெபசிட் செய்யவும் கட்டணம் பிடிக்கப்படும்.
சேவைக் கட்டணம்
14.5 சதவீதமாக இருந்த சேவைக்கட்டணம் 2016-ம் ஆண்டு 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கல்வி வரி, தூய்மை இந்தியா வரி போன்றவை இதில் அதிகம்.
வங்கி இருப்புத் தொகை
வங்கி கணக்கில் இருப்புத் தொகை குறைந்தபட்ச வரம்பிற்கும் குறைவாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும்.
டெபிட்/கிரெடிட் கார்டுகள்
டிஜிட்டல் இந்தியா என்று அறிவித்திருந்தாலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை மீதான சேவை வரி செலுத்த வேண்டும்.
பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்றல்
ஒரு பொருளை வாங்கினாலும் வரி செலுத்த வேண்டும், ஒரு பொருளை விற்றாலும் வரி செலுத்த வேண்டும்.
வருமானத்தைப் பதுக்கினாலும் வரி
ஒருவர் வருமான வரித்துறைக்குக் கணக்குக் காட்டாமல் தனது வருமானத்தை மறைத்து வைத்திருந்தாலும் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும்.
உற்பத்தி வரி
ஒரு பொருளை நாம் உற்பத்தி செய்கின்றோம் என்றாலும் அதிலும் உற்பத்தி வரி செலுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு நிதி
இவை எல்லத்திற்கும் பொதுமக்கள் வரி செலுத்த வேண்டும், அபராதம் செலுத்த வேண்டும், கட்டணம் செலுத்த வேண்டும் என்று இருக்கும் போது அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தால் வரி இல்லை.
இந்தக் கட்டுரை பேஸ்புக் பதிவின் தமிழாக்கம்..!


Click it and Unblock the Notifications