இண்டிகோ, விஸ்தரா நிறுவனங்கள் போட்டா போட்டி விமான டிக்கெட் ஆஃபர்.. 899 ரூபாய் முதல் விமான பயணம்..!
உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல ஹோலி ஆஃபர்கள் வழங்கி வரும் நிலையில் ஏர் ஏசியா, விஸ்தரா அஃபர்களுடன் இண்டிகோ நிறுவனமும் இணைந்தது.
பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனத்தின் ஹோலி ஆஃபரில் விமான டிக்கெட் 899 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை காலம்
இண்டிகோ நிறுவனத்தின் சலுகை விலையில் 2017 செப்டம்பர் 19-ம் தேதி வரை பயணம் செய்யவத்ற்கான டிக்கெட்களை 2017 மார்ச் 15-ம் தேதி வரை புக் செய்யலாம்.
விஸ்தரா ஆஃபர்
இதே போன்று விமான டிக்கெட் ஆஃபர் அறிவித்துள்ள விஸ்தரா நிறுவனத்தில் 999 ரூபாய்க்கு விமான டிக்கெட் பெறலாம்.
விஸ்தராவின் இந்த ஹோலி ஆஃபர் விமானப் பயண டிக்கெட்களை மார்ச் 10-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை மார்ச் 30 முதல் அக்டோபர் 1 வரையிலான பயணங்களுக்கு டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
எனினும் இந்த ஆஃபர்களுக்கான டிக்கெட்களை 21 நாளுக்கு முன்பாகப் புக் செய்யும் போது மட்டுமே ஆஃபர் விலையில் டிக்கெட் புக் செய்ய முடியும்.
முன்னுரிமை
விஸ்தரா நிறுவனம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அள்ளிக்கும் என்றும், குறைந்த அளவிலான டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் உள்ளன என்றும் அறிவித்துள்ளது.
விஸ்தரா நிறுவனம்
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான விஸ்தரா 19 வழித்தடங்களில் விமானச் சேவையை அளிக்கின்றது. 13 விமானங்களுடன் வாரத்திற்கு 500-க்கும் மேற்பட்ட பயணங்களை விஸ்தரா அளித்து வருகின்றது.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், ஜெட் நிறுவனங்களும் முறையே 1499 ரூபாய் மற்றும் 1399 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications