வருஷம் பிறந்து இன்னும் மூனு மாதம் கூட ஆகவில்லை.. அதுக்குள்ளயா.. என்னடா நடக்குது இங்க..?
2017-ம் ஆண்டுத் துவங்கியதில் இருந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
உலக அரசியல் மாற்றம், நிதிப் பற்றாக்குறை, அண்மைக்காலங்களில் அதிகமாகத் துவங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற எதிர்காலம் போன்றவையா நடைமுறைப்படுத்தப்படும் காஸ்ட் கட்டிங் சிக்கல் எனப் பலவற்றை இந்திய டெக் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
இப்படிச் சிக்கல்கள் இருப்பதினால் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பின்க் ஸ்லிப்ஸ் அளித்து வெளியேற்றி வருகின்றன.
இப்போது என்னவென்றால் புது வருடம் துவங்கி இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லீகோ
நவம்பர் மாதம் லீகோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எழுதிக் கடித்ததில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து ஓட்டுநர் இல்லா கார் தயாரிக்கும் வணிகத்தில் முதலீடு செய்து வருவதால் தீவிர பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது சீன கோடிஸ்வரர் ஜியா யூடிங் பணச் சிக்கலால் தனது நிறுவனத்தில் முதன் முறையாக 85 சதவீத இந்திய ஊழியர்களைப் பணியை வீட்டு நீக்குவதாக அறிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் தலைவர் பதவிகளில் இருந்து இருவர் வெளியேறியுள்ளனர். அதனால் தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து தங்களது நிறுவன கிளைகளை மூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஏர்செல்
இந்திய டெலிகாம் துறையில் நிறுவனங்கள் இணைப்பின் காரணமான ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மட்டும் 25,000 ஊழியர்களுக்குப் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் புதன்கிழமை செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல், ஆனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் இணைவதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில், இணைப்பிற்கு முன்னரே சுமார் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பகுதிகளில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமான இடத்தையும் வர்த்தகத்தையும் பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது.
ஸ்னாப்டீல்
ஸ்னாப்டீல் நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பணம் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்து 600 ஊழியர்களைப் பணியை விட்டு நீக்க இருக்கின்றது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி ஒரு வாரமாக இதற்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், 500 முதல் 600 ஊழியர்கள் வரை ஸ்னாப்டீல், வல்கன் (லாஜிஸ்டிக்ஸ்) மற்றும் பீரிசார்ஜ் (டிஜிட்டல் பணம் செலுத்தும் வணிகம்) பிரிவுகளில் இருந்து நீக்கப்படலாம்.
மேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளரான ஜப்பானின் சாப்ட் பேங்க் பங்குகளின் மதிப்பீடு அளவைக் குறைத்து, பின்னர் இப்போது நிறுவனத்தை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளது ஸ்னாப்டீல் நிறுவனத்திற்குப் பெறும் இழப்பாக உள்ளது.
இப்போது ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சிக்கலால் பஹல் மற்றும் இணை நிறுவனர் ரோஹித் பன்சால் இருவரும் ஒரு வருடத்திற்கு 100 சதவீதம் சம்பளம் வாங்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதற்கான முடிவை இருவரும் கலந்து ஆலோசித்து நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிதாகக் கவனம் செலுத்தாது நம் தவறு என்றும் அதற்காக ஊழியர்களை வெளியேற்றுவதற்கு முன் தங்களது சம்பளத்தை விட்டுத் தர முடிவுசெய்துள்ளனர்.
யெப்மீ
ஃபேஷன் விற்பனையாளர் நிறுவனமான யெப்மீ அன்மையில் தனது கிடங்கு மற்றும் தர கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் இருந்து அறிவிக்கப்படாத எண்ணிக்கையில் வேலையை வீட்டு அனுப்பியது.
இந்நிறுவனம் செல்லா ரூபாய் நோட்டு அறிவித்த சமயத்தில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. எனவே இந்த நிறுவனம் இந்தியாவை விட்டுப் பிற நாடுகளில் மட்டும் தனது சேவையை முழுமையாக அளிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் யெப்மீ அன்மையில் இங்கிலாந்தில் தனது சேவையை அளிக்கத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
கிராப்ட்ஸ்வில்லா
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முன்னணி பிராம்பரிய விற்பனையாளரான கிராப்ட்ஸ்வில்லா நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறுகையில், நிறுவனத்தில் பிராடெக்ட் மற்றும் டெக்னாலஜி அணிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதேபோல் ஆப்ரேஷன்ஸ் மற்றும் மார்கெட்டிங் அணிகளில் பெரும்பாலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று தெரிவித்தார்.
முக்கிய நிறுவனங்கள்
ஒவ்வொரு காலாண்டிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏதேனும் ஒன்று ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்த முறையில் பணிநீக்கத்தில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளது. ஸ்னாப்டீல் நிறுவனத்தில் துவங்கிய இப்பணிநீக்கம் தற்போது கிராப்ட்ஸ்வில்லா, யெப்மி, Tolexo ஆகிய நிறுவனங்கள் 100க்கும் அதிகமான ஊழியர்களுக்குப் பணிநீக்க ஆணையை அளித்துள்ளது.
9,000 ஊழியர்கள்
ஈகாமர்ஸ், புட்-டெக் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் 2016ஆம் ஆண்டில் சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என Xeler8 ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications