ஒரே செட்டில்மண்ட்டில் மொத்த பணத்தையும் அளிக்க தயார், வங்கிகள் தான் நிராகரிக்கின்றன: விஜய் மல்லையா

ஒரே செட்டில்மண்ட்டில் மொத்த பணத்தையும் அளிக்க தயார், வங்கிகள் தான் நிராகரிக்கின்றன: விஜய் மல்லையா

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 9,000 கோடிகள் ரூபாய் கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக உள்ளார். இப்போது தலைமறைவாக லண்டனில் இருக்கும் மல்லையா ஒரே செட்டில்மண்ட்டில் மொத்த பணத்தையும் அளிக்கத் தயார் என்றும் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வங்கிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பொதுத் துறை வங்கிகளிடம் ஒரே செட்டில்மண்ட்டில் மொத்த பணத்தையும் பெறுவதற்கான கொள்கைகள் உள்ளன. இதுபோன்ற கடன் வாங்கியவர்களில் பலர் தங்களது கடனை அடைத்துள்ளனர்.

ஏன் வங்கிகள் நிராகரிக்கின்றனர்

ஏன் வங்கிகள் நிராகரிக்கின்றனர்

இப்படி மொத்தமாகக் கடன் அடைக்கும் வாய்ப்பை எனக்கு ஏன் வங்கிகள் நிராகரிக்கின்றனர். நான் ஒரே செட்டில்மண்ட்டில் கடனை அடைக்கின்றேன் என்றால் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்கும் முன்பு வங்கிகள் ஏன் நிராகரிக்கின்றனர். நியாயமான அடிப்படையில் பேசி தீர்வு காண நான் தயாராக இருக்கிறேன் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை டிவிட் செய்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்குத் தயார்

பேச்சுவார்த்தைக்குத் தயார்

உச்ச நீதிமன்றம் இதற்குச் சரியான முடிவை எடுக்கும் நான் நம்புவதாகவும், அனைத்து வங்கிகளும் நியாயமான அடிப்படையில் பேசி தீர்வு காண வந்தால் கடனை அடைக்க நாங்கள் தாயார் என்றும் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசிடம் நியாயமான விசாரணை இல்லை

இந்திய அரசிடம் நியாயமான விசாரணை இல்லை

அனைத்து நீதி மன்றங்களின் தீர்ப்பையும் தாழ்மையுடன் விதிவிலக்கு இல்லாமல் தான் கிழ்படிவதாகவும், அரசாங்கம் எனக்கு நியாயமான விசாரணை இல்லாமல் குற்றவாளி என்று தீர்மானமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளதா இல்லை அரசு எனக்கு எதிராக உள்ளதா என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்றும் மல்லையா கேட்டுள்ளார்.

சொத்துக்கள் வெளிப்படுத்துவதின் உண்மைத்தன்மை

சொத்துக்கள் வெளிப்படுத்துவதின் உண்மைத்தன்மை

வியாழக்கிழமை உச்ச நீதி மன்றம் மல்லையாவின் சொத்துக்கள் வெளிப்படுத்துவதின் உண்மைத்தன்மை மற்றும் தனது பிள்ளைகள் பெயரில் 40 மில்லியன் டாலர்கள் சொத்தை மாற்றி இருப்பது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளது.

இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை

இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை

சென்ற மாதம் இந்திய அரசு இங்கிலாந்து அரசிடம் கடன் வாங்கிவிட்டுத் தலைமறைவாக இருக்க இங்கிலாந்து சட்ட திருத்தங்கள் உதவுகின்றன, இதனைச் சரிசெய்து ஏமாற்றியுள்ள தொழிலதிபரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

மல்லையா

மல்லையா

மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் அளவுக்கு அதிகமாக 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+