கோகோ கோலா மீது தடை.. தமிழனுடன் ஒன்றுசேர்ந்த சேட்டன்மார்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சனைகளை அமைதியான முறையில் வெற்றி கண்ட தமிழக மக்கள், விசாயிகளின் முக்கிய வளமான தண்ணீரை அதிகளவில் பயன்படுத்தும் கோகோ கோலா, பெஸ்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களின் விற்பனையை அடியோடு தடை செய்யத் தமிழக மக்களும், வணிகர்கள் சங்கங்களும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் தமிழக மக்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அண்டை மாநிலமான கேரளாவும், தனது விவசாயிகளின் நலனைக் காக்க கோகோ கோலா, பெஸ்சி குளிர்பானங்களின் விற்பனையைத் தடை செய்யக் கேரள வியாபாரி விவசாயி சங்கமான KVVES அமைப்பு இதுக்குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோகோ கோலா, பெஸ்சி

கோகோ கோலா, பெஸ்சி

நிலத்தடி நீர் வளத்தில் மிகவும் சிறப்பான வளத்தைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக அதிகளவிலான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் விவசாய உற்பத்தியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களான கோகோ கோலா, பெஸ்சி நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி அதன் ஆதாரத்தையே அழித்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் அதிகளவிலான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

 

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் என எவ்விதமான பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து அமைதி போராட்டத்தின் வாயிலாகத் தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீண்டு கொண்டு வந்த கையோடு.

தமிழகம் , தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பிறவற்றிலும் கவனத்தைச் செலுத்த இளைஞர்கள் முடிவு செய்தனர்.

 

நிலத்தடி நீர்

நிலத்தடி நீர்

இதன்படி நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்திக் குளிர்பானங்களைத் தயாரிக்கும் கோகோ கோலா, பெஸ்சி நிறுவன குளிர்பானங்களைக் குடிக்கமாட்டோம் என இளைஞர்கள் முடிவு செய்த அடுத்தச் சில நாட்களில் தமிழக வியாபாரிகள் சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து விற்பனையை முற்றிலும் நிறுத்தியது.

கேரளா

கேரளா

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கடந்த சில வருடங்களாக அதிகளவிலான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டைப் போலேவே கேரள மாநிலமும் கோகோ கோலா, பெஸ்சி நிறுவன குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

 

 

மார்ச் 14

மார்ச் 14

இதுகுறித்துக் கேரள முதலமைச்சர் பிரானாய் விஜயன் ஒத்துழைப்பைக் கேட்டு மார்ச் 14ஆம் தேதி KVVES அமைப்பின் தலைவர் டி.நஜூரூதீன் விற்பனையின் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் பொருட்கள்

உள்நாட்டுப் பொருட்கள்

இந்நிலையில் குளிர்பான சந்தையில் ஏற்படும் சரிவை சமாளிக்க உள்நாட்டு தயாரிப்புகளான எலுமிச்சை சோடா, இளநீர் போன்றவற்றை முறையாக வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர KVVES அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதனால் குளிர்பான சந்தையில் கார்பரேட் நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்து விவசாயிகள் அதிகளவிலான லாபத்தை அடைவார்கள் எனவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

 

7 லட்சம் கடைகள்

7 லட்சம் கடைகள்

மேலும் இந்த விற்பனை தடையில் கேரள மாநிலத்தில் இருக்கும் 7 லட்சம் கடைகள் ஒன்றுசேர உள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட நெருக்கடி கேரளாவிலும் தொடர்ந்துள்ளதால் தென்னிந்தியாவில் கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

மேலும் இது அடுத்தச் சில மாதங்களிலோ, அல்லது வருடங்களிலோ கர்நாடகா, தெலுங்கான மற்றும் ஆந்திரா மாநிலத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மார்ச் 1

மார்ச் 1

தமிழ்நாடு வணிக வியாபாரிகள் பேரமைப்பில் 6000 உறுப்பினர்கள் மற்றும் 15 லட்ச கடைகள் உள்ள நிலையில் மார்ச் ஆம் தேதி முதல் கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவன குளிர்பானங்களின் விற்பனையை முழுமையாக நிறுத்தியுள்ளது செய்துள்ளது.

..." data-gal-src="http:///img/600x100/2017/03/12-1489303823-9zico-coconut-water-no-added-sugar-not-from-concentrate.jpg">
ஜிகோ...

ஜிகோ...

<strong>தண்ணீர், பால் அடுத்து இளநீர்: கோகோ கோலாவின் தொடர் அதிரடி..! </strong>தண்ணீர், பால் அடுத்து இளநீர்: கோகோ கோலாவின் தொடர் அதிரடி..!

<strong>இளைஞர்கள் எழுச்சியால் பெப்ஸி, கோகோ கோலா படும்பாட்டைப் பாருங்கள்...!</strong>இளைஞர்கள் எழுச்சியால் பெப்ஸி, கோகோ கோலா படும்பாட்டைப் பாருங்கள்...!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala traders to stop selling Coca Cola, Pepsi

Kerala traders to stop selling Coca-Cola, Pepsi - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X