மும்பை: இந்திய சந்தையில் இன்சூரன்ஸ், நிதி சேவையில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சீஇஓ சாம் கோஷ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
9 வருடம்
சுமார் 9 வருடமாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் பணியாற்றிய சாம் கோஷ் தற்போது ஆர்கேப் நிறுவனத்தை விடவும் பெரிய நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுக்குறித்து சாம் கோஷ் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பஜாஜ் அலையன்ஸ்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த முன்னணி நிதிசேவை நிறுவனமான அலையன்ஸ் குரூப் நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பஜாஜ் அலையன்ஸ் என்ற பலவேறு நிதிசேவைகளை அளித்த வருகிறது. 2008ஆம் ஆண்டுக்கு முன் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் 2008ஆம் ஆண்டு ஆர்கேப் நிறுவனத்தில் இணைந்தார்.
ரிலையன்ஸ் கேபிடல்
2008ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் இணைந்த சாம் கோஷ் 2015ஆம் ஆண்டு மத்தியில் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் இணைந்து நிறுவனத்தின் சிஇஓவாக பதவி உயர்வு பெற்றார்.
சாம் கோஷ்
ஆர்கேப் நிறுவனத்தின் முக்கிய நிறுவன இணைப்புகள், பெரிய டீல்கள் என அனைத்திலும் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக நிப்பான் லைப் நிறுவனத்துடனான இணைப்பில் சாம் கோஷ் முக்கிய பங்காற்றினார்.
புதிய சிஇஓ
இந்நிலையில் சாம் கோஷ் ஆர்கேப் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதால், இந்ோநிறுவனத்தின் புதிய சிஇஓ விரைவில் அறிவிக்கப்படும் என ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பங்குச்சந்தை
இதனால் திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆர்கேப் நிறுவன பங்குகள் சரிவையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படவேண்டும்.


Click it and Unblock the Notifications