அமெரிக்க அரசின் ஊழிர்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்ரவரி மாதம் உற்பத்தி, சுகாதாரம், சுரங்கம், மற்றும் கட்டுமான துறையில் சுமார் 2,35,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் அமெரிக்கச் சந்தையில் புதிதாக 2,38,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் சரியான பாதியில் செல்வதாகவும் இதுவே அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் மிகவும் சரியானது என்று கருத்து நிலவுகிறது.
இதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை பிப்ரவரி மாதத்தில் வலிமையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் வாயிலாக அடுத்த வாரம் நடைபெறும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் கரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications