2018இல் 4ஜி சேவை.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி விரிவாக்க திட்டம்..!

2018இல் 4ஜி சேவை.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி விரிவாக்க திட்டம்..!

டெல்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 2017-18ஆம் நிதியாண்டின் முடிவிற்கு இந்தியா முழுவதும் இருக்கும் 2ஜி பேஸ் ஸ்டேஷன்களையும் 3ஜி மற்றும் 4ஜி பேஸ் ஸ்டேஷன்களாக மாற்ற முடிவு செய்துள்ளது.

28,000 பேஸ் ஸ்டேஷன்

28,000 பேஸ் ஸ்டேஷன்

இப்பணியில் இந்தியாவில் இருக்கும் சுமார் 28,000 4ஜி பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் 4ஜி சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.

அனுபம் ஸ்ரீவஸ்தவா

அனுபம் ஸ்ரீவஸ்தவா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 8வது விரிவாக்கத் திட்டத்தில் 2ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் பழைய இயந்திரங்களை 3ஜி மற்றும் 4ஜி சேவை அளிக்கும் வகையில் அதிநவீன இயந்திரங்களை நிறுவப்படுகிறது. இதற்கான பணிகளை 2018ஆம் நிதியாண்டிற்குள் முடிவடைந்து விடும் எனப் பிஎஸ்என்எல் அமைப்பின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

4ஜி சேவை

4ஜி சேவை

மேலும் இந்தியாவில் சில குறிப்பிட்ட முக்கிய வட்டங்களில் மட்டுமே 4ஜி சேவையைக் கொண்டு வர பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளதாக அனுபம் தெரிவித்தார்.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நோக்கியா, எரிக்சன், மற்றும் சீன நிறுவனமான ZTE ஆகியவை போட்டிபோட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குறைந்தபட்ச தொகையை நோக்கியா கோரியுள்ளது. நிறுவனங்களின் தேர்வு குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என அனுபம் கூறினார்.

பிராந்திய பணிகள் பிரிவினை

பிராந்திய பணிகள் பிரிவினை

குறைந்த தொகையை விண்ணப்பத்திற்கும் நிறுவனத்திற்கு வடக்கு மற்றும் தென் பிராந்திர பணிகளையும், L2 பிட்டர் எனப்படும் 2வது குறைந்த தொகையை விண்ணப்பத்திற்கும் நிறுவனத்திற்குக் கிழக்கு மேற்கு பிராந்திர பணிகள் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+