வங்கி மோசடிகள் பட்டியலில் ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகள்..!
வங்கிகளில்-2016ம் ஆண்டு நடந்த மோசடிகள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ. இதில் பல மோசடிகள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைதான் நடந்துள்ளது என்று ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றது.
இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த மோசடி பட்டியலில் இரண்டால் இடத்தில் உள்ளது என்பது தான்.
ஐசிஐசிஐ
நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 455 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் 1 லட்சம் ரூபாய் மோசடி வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சற்று குறைவாக 429 மோசடி வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மூன்று மற்றும் நான்காம் இடம்
அடுத்த இடங்களான மூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஸ்டாண்டர்டு சாட்டர்டு 244, எச்டிபசி வங்கியில் 237 வழக்குகள் உள்ளது.
பிற வங்கிகள்
பிற வங்கிகளில் உள்ள மோசடி வழக்குகளில் ஆக்ஸிஸ் வங்கியில் 189-ம், பாங்க் ஆ பரோடாவில் 176-ம், சிட்டி பாங்கில் 150 வழக்குகளும் ஆர்பிஐயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு கோடிகளுக்கு மோசடிகள் நடந்துள்ளன?
எஸ்பிஐ வங்கியில் 2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடிகளும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2,250.34 கோடிகளும், ஆக்ஸிஸ் வங்கியில் 1,998.49 கோடி ரூபாய் மதிப்பு அளவிலும் மோசடிகள் நடந்துள்ளது.
முக்கிய வங்கியில் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள்
இந்திய ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்திற்கு அளித்துள்ள தரவில் வங்கி அதிகாரிகள் பலர் இந்த மோசடிகளில் உதவியிருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 64 ஊழியர்களும், எச்டிஎப்சி வங்கியில் 49 ஊழியர்களும், ஆக்ஸிஸ் வங்கியில் 35 ஊழியர்களும் இந்த மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
மொத்த வழக்குகளும் மதிப்பும்
மொத்தமாக இது வரை 450 பொதுத் துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தமாக 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் மொத்தம் 17,750.27 கோடி ரூபாய் மதிப்பு அளவில் மோசடிகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications