ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓ தேவாங் மோடி..!
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் முன்னணி இன்சூரன்ஸ், நிதி சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சீஇஓ சாம் கோஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேவாங் மோடியை ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவு தான் ரிலையன்ஸ் கேபிடல்.
தேவாங் மோடி
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்திற்கு முன்னாள் தேவாங் மோடி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தகத்தின் தலைவராக இருந்தார். இவரது தலைமையின் கீழ் பஜாஜ் பைனான்ஸ் இந்தியா முழுவதும் 300 கிளைகளுடன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.
அதுமட்டும் அல்லாமல் பல முக்கிய வர்த்தகத்திலும் பஜாஜ் பைனான்ஸ் இறங்கியது தேவாங் மோடி தலைமையின் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.
20 வருட அனுபவம்
44 வயதாகும் தேவாங் மோடிக்கு நிதித் துறையில் சுமார் 20 வருட அனுபவம் உள்ளது. மகாஜன் மற்றும் ஆய்பாரா நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் துவங்கி தேவாங் மோடி, ஈஒய், ஜியீ மணி நிதியியல் சேவையின் துணை தலைவராகப் பணியாற்றினார். இதன் பின்னர்ப் பஜாஜ் பைனான்ஸ்.
ரிவையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ்
வங்கிகள் அல்லாத நிதி சேவை அளிக்கும் நிறுவனங்களில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பிரிவில் மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டிருப்பது ரிவையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ்.
சொத்துக்கள்
டிசம்பர் 31, 2016 வரையில் இந்நிறுவனம் 16,191 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.
சாம் கோஷ்
ஆர்கேப் நிறுவனத்தின் முக்கிய நிறுவன இணைப்புகள், பெரிய டீல்கள் என அனைத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர். குறிப்பாக நிப்பான் லைப் நிறுவனத்துடனான இணைப்பில் சாம் கோஷ் முக்கியப் பங்காற்றினார் சாம் கோஷ்.
9 வருடம்
சுமார் 9 வருடமாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் பணியாற்றிய சாம் கோஷ் தற்போது ஆர்கேப் நிறுவனத்தை விடவும் பெரிய நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications