ஜியோவிற்காக பிரத்யோகமான 4ஜி போன் ஒன்றை தயாரிக்கின்ற கூகுள்..!

ஜியோவிற்காக பிரத்யோகமான 4ஜி போன் ஒன்றை தயாரிக்கின்ற கூகுள்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோவில் 4ஜி சேவையில் மட்டும் வேலை செய்யக் கூடிய விலை குறைவான ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்க இருக்கின்றது.

இந்த விலை குறைவன ஸ்மார்ட்போன் 2017-ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், கூகுள் நிறுவனத்தின் பிறாண்டுடன் இணைந்து ஜியோவும் மிகப் பெரிய சந்தையைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஸ்மார்ட் டிவிகளுக்கான மென்பொருள்

ஸ்மார்ட் டிவிகளுக்கான மென்பொருள்

ஸ்மார்ட்போன் மட்டும் இல்லாமல் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றது, இந்தச் செயலி 2018-ம் ஆண்டுத் துவக்கத்தில் வெளியிடப்படும்.

கூகுள் பிறாண்டு

கூகுள் பிறாண்டு

கூகுள் நிறுவனத்தின் பிறாண்டு பெயரினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் தங்களது போனை இன்னும் பெரிய அளவில் விற்பனை செய்ய முடியும். ஜியோ செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் திறம்பட இயங்குவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு வருகின்றது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ரீடெய்ல் பிரிவின் மூலமாகச் சீன ஆன்லைன் தரவு மேலாண்மை அமைப்புகளுடன் இணைந்து 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாக்கெட் ரவுட்டர்களில் பாக்ஸ்கான் நிறுவனத்தைத் தவிர்த்து பிற நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

ZTE, சிகே டெலிகாம், விங்டெக், மற்றும் டின்னோ மொபைல் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான பணிகளும் நடந்துவருகின்றது.

 

லைப் பிறாண்டு 4ஜி போன்

லைப் பிறாண்டு 4ஜி போன்

ரிலையன்ஸ் நிறுவனம் சீனா மற்றும் தைவான் சேர்ந்த தங்களது ஆன்லைன் தரவு மேலாண்மை அமைப்புகளிடம் இருந்து ஏற்கனவே லைப் பிறாண்டு பெயரில் 4ஜி ஸ்மார்ட்போன்கள், செட் ஆ பாக்ஸ்கள் போன்ற பல தயாரிப்புகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

1000 ரூபாய்க்கு 4ஜி போன்

1000 ரூபாய்க்கு 4ஜி போன்

அதுமட்டும் இல்லாமல் லாவா மற்றும் பிற சீன நிறுவனங்களுடன் இணைந்து வோல்ட் வசதியுள்ள ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் பணியில் இயங்கி வருகின்றது. மானியம் விலையில் ஜியோ நிறுவனம் 1,000 ரூபாய்க்கு 4ஜி பியூச்சர் போன்களை இலவச ஆஃபர்களுடுன் வெளியிடும் என்றும் நமக்குக் கிடைத்த செய்திகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+