தேங்காய் விளைச்சலில் கேரளாவை முந்திய தமிழகம்..!
ஈரோடு: தேங்காய் விளைச்சலில் இந்தியாவில் முதல் மநிலமாக இருந்த கேரளாவை முந்தியது தமிழகம். இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் தமிழகம் 34 சதவீதத்துடன் முதல் இடத்திலும், கேரளா பின் தங்கி 24 சதவீத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
தேங்காய் விளைச்சல் குறித்து அரசு உதவி பெறும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எக்கனாமிக்ஸ் பேராசிரியர் முனைவர் எம் ராஜூ அவர்கள் நடத்திய ஆய்வின் தரவின் படி இந்தத் தமிழகம் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகின்றது.
மத்திய அரசின் மனித வளப்பிரிவின் கீழ் இயங்கி வரும் யூஜிசி இந்த ஆய்வை 3 லட்சம் ரூபாய் செலவில் நடத்தியுள்ளது.
எங்கு அதிகத் தேங்காய் விளைச்சல் பெறப்படுகின்றது தெரியுமா?
இந்தியாவில் 90 சதவீத தேங்காய் விளைச்சல் தென்னகத்தில் இருந்தும், வட இந்தியாவில் இருந்து வெறும் 10 சதவீதம் மட்டுமே தேங்காய் விளைச்சலும் கிடைக்கின்றது.
இந்தியாவில் தேங்காய் விளைச்சல் அளவீடுகள்
1950-1951 காலக் கட்டங்களில் 1 ஹெக்டேர் தென்னை மறம் சாகுபடியில் 5,200 தேங்காய்கள் கிடைக்கும் என்று, இது 8,900 ஆக இப்போது அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு கூறுகின்றது. தமிழ்நாட்டில் 2014-2015ம் நிதி ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 14,875 தேங்காய்கள் அளித்ததாகக் கூறப்படுகின்றது.
மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளான கோயம்புத்தூர் - திருப்பூர் போன்ற இடங்களில் விளைச்சல் குறைந்து ஹெக்டேருக்கு 7,622 காய்களாக உள்ளது.
தமிழகத்தின் விளைச்சல் நிலை
எனினும் உளூந்தூர்பேட்டை மற்றும் குடிமங்களம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடங்களில் விளைச்சல் அதிகமாகவே உள்ளது. ஆனால் வறட்சியின் காரணமாக 45 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக விளைச்சல் குறைந்துள்ளது. வறட்சிக்கு முன்பாகத் தமிழகத்தின் சராசரி தேங்காய் உற்பத்தி 48 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
விளைச்சல் குறைவால் சராசரியாக 14 ரூபாயாக இருந்து வந்த தேங்காயின் விலை 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. வருங்களத்தில் தேங்காயின் விளைச்சல் தேங்காய் பூக்கள் வருவதை வைத்துத் தான் கூற முடியும் என்று பேராசிரியர் ராஜூ அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி மற்றும் உற்பத்தி மதிப்பீடு குறித்த ஆய்வைத் தேங்காய் வளர்ச்சி வாரியம் நடத்தியது. இந்தக் குழு தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்
இந்த அறிக்கை தேங்காய் வாரியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகின்றது. ஆவார்கள் விவசாயிகள் அதிக விளைச்சல் அளிக்க உதவுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications