‘மோடி’யுடனான டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவன தலைவர்களின் சந்திப்பு எதற்காக..?
உலகளவில் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களான டொயாட்டா மற்றும் சுசூகி நிறுவன தலைவர்கள் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்துத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
பிரதமர் மோடி அழைத்ததன் பெயரில் டொயோட்டா நிறுவன தலைவர் அக்கியோ டொயாட்டாவும், சுசூகி நிறுவன தலைவர் ஓசாமு சுசூகியும் கூட்டாண்மை மற்றும் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் பிரதம மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடோமொபைல் துறைக்கு ஓர் நற்செய்தி
டொயோட்டாவின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உலகத் தலைமை உடன் சிறு ரகக் கார் தயாரிப்பில் வலிமையாக உள்ள சுசூகி நிறுவனத்துடன் கூட்ட சேர்ந்து இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய உள்ளன.
புதிய வாய்ப்புக்கள்
இதனால் இந்தியாவில் கார் தயாரிப்பில் மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிக அளவிலான உதிரிப்பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
இந்த இரு நிறுவனங்களும் கூட்டு சேர்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் மேக் இன் இந்தியா திட்டம் மேலும் விளம்பரப்படுத்த உதவும் என்று கூறப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் புதிய தொழில்நுட்ப கார்களை ஏற்றுமதி செய்யவும் இது உதவி செய்யும்.
இந்தியாவிற்கு உள்ள நன்மைகள்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரண்டு ஜப்பான் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய வணிகச் சூழல், பாதுகாப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வணிக உறவுகளை ஆராய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ பூம்
சுய ஓட்டுநர், பாதுகாப்பு, மற்றும் உற்பத்தி பொருட்கள், உதிரிப் பாகங்கள் போன்றவற்றை மியூச்சுவலாகப் பகிர்ந்து கொண்டு கூட்டு சேர்ந்து வணிகத்தை அதிகரிக்க இந்த இரு நிறுவனங்கள் இடையேயும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மாருதியுடனான ஒப்பந்தம்
சுசூகி நிறுவனத்திற்கு ஏற்கனவே மருதி சூசுகி நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தம் என்னவாகும் என்றும் இப்போது கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்த விவாதங்களுக்காகவே இரண்டு நிறுவன தலைவர்களும் மோடியைச் சந்தித்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications