கர்நாடகா பட்ஜெட்: பெண் காவலர்களுக்கு தனிக் கழிப்பறை, சேரி மக்களுக்கு இலவசமாக தண்ணீர்
கர்நாடகா பட்ஜெட்: பெண் காவலர்களுக்கு தனிக் கழிப்பறை, சேரி மக்களுக்கு இலவசமாக தண்ணீர்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கக் கர்நாடக காவல் துறைக்குத் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
பெங்களூரில் 20 கோடி ரூபாய் செலவில் தடய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
மாநகரங்களைப் போன்றே 'டையல் 100' சேவை அனைத்து மாவட்டங்களிலும் மெருகேற்றப்படும்.

பெண் காவலர்களுக்குக் காவல் நிலையங்களில் தனிக் கழிப்பறை வசதி செய்து தரப்படும்.
பெண் காவல் துறையினருக்கான பயிற்சி பள்ளியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 10 கோடி ஒதுக்கப்படும்.சேரி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர்
சேரியில் வசித்து வரும் மக்களுக்கு மாதம் 10,000 லிட்டர் வரை தண்ணீர் இலவசமாக அளிக்கப்படும்.
நீர் நிலைகள் பராமரிப்பு
புயல் காலங்களில் நீர் நிலைகளில் மலை நீரைச் சேமிக்க 300 கோடி ரூபாய் பிபிஎம்பி-க்கு ஒதுக்கப்படும்.


Click it and Unblock the Notifications