ஏர் ஏசியா அதிரடி ஆஃபர்: உள்நாட்டு விமான பயணம் 899 ரூபாய், வெளிநாட்டு விமானப் பயணம் 2,399 ரூபாய்!

ஏர் ஏசியா அதிரடி ஆஃபர்: உள்நாட்டு விமான பயணம் 899 ரூபாய், வெளிநாட்டு விமானப் பயணம் 2,399 ரூபாய்!

பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா அதிரடி சலுகையாக உள்நாட்டு விமானப் பயணக் கட்டணத்தை 899 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை விலையில் 2017 செப்டம்பர் 1 முதல் 2018 ஜூன் 5-ம் தேதி வரை பயணம் செய்ய 2017 மார்ச் 19-ம் தேதிக்குள் டிக்கெட்களைப் புக் செய்ய வேண்டும் என்று இணையதளப் பக்கத்தில் ஏர் ஏசியா குறிப்பிடப்பட்டுள்ளது.

899 ரூபாய் சலுகை விலை

899 ரூபாய் சலுகை விலை

ஏர் ஏசியாவின் இந்த 899 ரூபாய் சலுகை விலை கட்டணத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் வரை செல்லலாம். அது மட்டும் இல்லாமல் பெங்களூர், கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், பூனே, புது டெல்லி, கவுகாத்தி, இம்பால், விசாக், ஹைதராபாத், ஸ்ரீநகர், பக்டோக்ரா போன்ற வழித்தடங்களிலும் ஆஃபர்கள் உள்ளன.

பிற வழித்தடங்களில் ஆஃபர் விலை உள்ள டிக்கெட்கள்

பிற வழித்தடங்களில் ஆஃபர் விலை உள்ள டிக்கெட்கள்

ஏர் ஏசியாவின் இந்த அதிரடி விற்பனையில் டெல்லியில் இருந்து கோவா செல்ல 2,999 ரூபாயும், டெல்லியில் இருந்து பெங்களூரு செல்ல 2,999 ரூபாயும், டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்ல 2,999 ரூபாயும், டெல்லியில் இருந்து பூனே செல்ல 2499 ரூபாயும், கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,299 ரூபாய்ம், கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,299 ரூபாயும், கோவாவில் இருந்து டெல்லி செல்ல 2,999 ரூபாயும், கோவாவில் இருந்து வைசாக் செல்ல 3,300 ரூபாயும் விமான டிக்கெட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வழித்தடங்களில் உள்ள ஆஃபர்

வெளிநாட்டு வழித்தடங்களில் உள்ள ஆஃபர்

உள்நாட்டுப் பயணங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பயணங்களிலும் ஏர் ஏசியா தனது ஆஃபர் விலையுள்ள டிக்கெட்களை 2,399 ரூபாய் முதல் அறிவித்துள்ளது.

ஆஃபர் உள்ள வெளிநாட்டு வழித்தடங்கள்

ஆஃபர் உள்ள வெளிநாட்டு வழித்தடங்கள்

வெளிநாட்டு வழித்தடங்களில் கோலாலம்பூர், பாங்காக், பக்கெட், சிங்கப்பூர், பாலி, மெல்போர்ன் உட்படப் பல இடங்களுக்கு மொத்தமாக 3 மில்லியன் டிக்கெட்களை ஆஃபராக அறிவித்துள்ளது ஏர் ஏசியா.

விமான டிராப்பிக்

விமான டிராப்பிக்

விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்ந்து ஆஃபர்கள் அறிவித்து வருவதினால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து டிராப்பிக் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் டாடா குழுமத்தின் கூட்டான்மை நிறுவனமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+