ஜியோவின் சேவையை தொடர்ந்து பெற பேடிஎம் பயன்படுத்தி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து சலுகைகளை பெறலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை துவங்கியது முதல் இலவசங்களை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப் படுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும் குறைவான விலையில் இப்போது இணையதள ஆஃபர்களை வழங்கி வருகின்றது.

 

வருகின்ற மார்ச் 31-ம் தேதியுடன் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் முடிவடையும் நிலையில் ஜியோ பிரிமியம் உறுப்பினர் ஆஃபர்களை பெற 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் செய்த பிறகு ஒவ்வொரு மாதமும் 303 ரூபாய் அல்லது 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் வரம்பற்ற இணையதள சேவை, மற்றும் இலவச அழைப்பு சேவையை 12 மாதங்களுக்குப் பெற முடியும்.

அதிர்ச்சி அடைந்துள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் அளிக்கும் ஆஃபர்

அதிர்ச்சி அடைந்துள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் அளிக்கும் ஆஃபர்

இவ்வளவு நாட்கள் இலவசமாக இணையதளத்தை பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் என்ன செய்வார்கள். இதற்காகவே பேடிஎம் நிறுவனம் இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவன ரீசார்ஜ் பேக்குகளுக்கு 30 ரூபாய் சலுகை அறிவித்துள்ளது.

31 மார்ச் மாதத்திற்குப் பிறகு இலவசம் இல்லை

31 மார்ச் மாதத்திற்குப் பிறகு இலவசம் இல்லை

இனி ஜியோவில் இலவசம் இல்லை, எனவே ஜியோ நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி பழைய இலவச சேவைகளைப் போன்ற திட்டங்களைத் தொடர மார்ச் 31-ம் தேதிக்குள் பிரீமியம் ரீசார்ஜ் பேக் அதாவது 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோ வெல்கம் ஆஃபர் போன்று வசதிகளைத் தொடர்ந்து பெற முடியும்.

ஜியோ 303 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் உள்ள பேடிஎம் ஆஃபர்கள்
 

ஜியோ 303 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் உள்ள பேடிஎம் ஆஃபர்கள்

பேடிஎம் இணையதளம் அல்லது செயலியில் 303 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்யும் போது 30 ரூபாய் உடனடியாக கேஷ்பேக் ஆஃபராக வழங்கப்படும். (இரண்டு ரீசார்ஜ்களுக்கு மட்டும்)

அதுமட்டும் இல்லாமல் அனைவருக்கும் 201 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆட் ஆன் பேக் இலவசமாகவும் வழங்கப்படும். மேலும் இதனுடன் இரண்டு திரைப்பட டிக்கெட்களை புக் செய்வதற்கான 150 வரையிலான சலுகை கூப்பன் வழங்கப்படும்.(அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுக்கும்)

 

ஜியோ 499 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் உள்ள பேடிஎம் ஆஃபர்கள்

ஜியோ 499 ரூபாய் ரீசார்ஜ் பேக்கில் உள்ள பேடிஎம் ஆஃபர்கள்

பேடிஎம் இணையதளம் அல்லது செயலியில் 499 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்யும் போது 30 ரூபாய் உடனடியாக கேஷ்பேக் ஆஃபராக வழங்கப்படும். (இரண்டு ரீசார்ஜ்களுக்கு மட்டும்)

அதுமட்டும் இல்லாமல் அனைவருக்கும் 301 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆட் ஆன் பேக் இலவசமாகவும் வழங்கப்படும். மேலும் இதனுடன் இரண்டு திரைப்பட டிக்கெட்களை புக் செய்வதற்கான 150 வரையிலான சலுகை கூப்பன் வழங்கப்படும்.(அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுக்கும்)

 

ஆஃபர்களுக்கான கூப்பன் குறியீடு

ஆஃபர்களுக்கான கூப்பன் குறியீடு

மேலே கூறிய ஆஃபர்களைப் பெற ‘PAYTMJIO' என்ற கூப்பன் குறியீட்டை பயன்படுத்தவும். இதனால் குறைந்தபட்சம் 381 ரூபாய் வரை சலுகை ஆபர்களைப் பெற முடியும்.

மேலும் இதே போன்ற பல ஆஃபர்கள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Enjoy Unstoppable, Unlimited Reliance Jio Services, Use Paytm Code Recharge Now for Rs.303

Enjoy Unstoppable, Unlimited Reliance Jio Services, Use Paytm Code Recharge Now for Rs.303
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X