5 லட்ச குடும்பங்களுக்கு இலவச எல்பிஐ இணைப்பு..!
கர்நாடக அரசு புதன்கிழமை தாக்கல் செய்த 1.86 லட்ச மதிப்புடை 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சமையல் எரிவாயு இல்லாத 5 லட்ச ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணைப்பு அளிக்க இம்மாநில அரசு உறுதி செய்துள்ளது.
பெங்களூரு ஸ்டீல் பிரிட்ஜ் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் முடங்கிய நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 88 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெப்பால் பைஓவர் விரிவாக்கம் மற்றும் அண்டர்பிரிட்ஜ் பணிகளைச் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு நகரப் பகுதிகளில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த 1,45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சாலைபோக்குவரத்தை தாண்டி இம்மாநிலத்தில் விமானப் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் கார்வாரா, மடிக்கேரி மற்றும் சிக்மங்களூரு பகுதிகளில் புதிதாக விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications