100 நிறுவனங்கள், 110 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களுக்கு ஜாக்பாட்..!

100 நிறுவனங்கள், 110 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களுக்கு ஜாக்பாட்..!

நாட்டின் முன்னணி மேலாண்மை கல்லூரிகளில் ஒன்றான ஐஐஎம் அகமதாபாத்தில் இந்த வருடம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்து சுமார் 100 நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்காகப் பங்குபெற்றது.

இதில் இந்திய கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் சராசரி அளவை விட அதிகமான சம்பளத்துடன் சுமார் 110 ஐஐஎம் அகமதாபாத் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் பிளிப்கார்ட் மட்டும் இடம்பெறவில்லை. ஏன் தெரியுமா..?

ஐஐஎம் அகமதாபாத்

ஐஐஎம் அகமதாபாத்

இந்தியாவில் பல மேலாண்மை கல்லூரிகள் இருந்தாலும் அனைத்திற்கும், ஏன் உலகளவிலான பட்டியலில் கூட ஐஐஎம் அகமதாபாத் கல்லூரி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இக்கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்கள் பெரும்பாலானோர் உலகின் முன்னணி நிறுவனங்களின் மிகப்பெரிய பதவியில் இருப்பார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் ஐஐஎம் அகமதாபாத் கல்லூரிக்கு வந்த நிறுவனங்களையும் வேலைவாய்ப்புகளையும் நீங்களே பாருங்கள்..! ஆனால் பிளிப்கார்ட் இதில் இல்லை..

 

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

நாட்டின் முன்னணி ஈகார்மர்ஸ் நிறுவனங்களின் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த வருடம் ஐஐஎம்-ஏ வளாகத் தேர்வில் கலந்துகொண்டு சுமார் 18 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தது. ஆனால் நிறுவனத்தில் சேரும் நாள்-ஐ 6 மாதத்திற்கு ஒத்திவைத்தது. இதனால் ஐஐஎம் கல்லூரிகளிடம் இருந்து வெறுப்பைச் சம்பாதித்தது.

இதனால் ஐஐஎம் எவ்விதமான தடையை விதிக்காத போதிலும் பிளிப்கார்ட் இந்த வருடம் வளாகத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

 

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்நிலையில் இந்த வருடம் ஐஐஎம்-ஏ வளாகத் தேர்வில் கலந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்களில் அமேசான் 18 பேருக்கும், மெக்கென்சி அண்ட் கம்பெனி 15 பேருக்கும், வங்கிப்பிரிவில் கோல்டுமேன் சாச்சிஸ் 9 பேருக்கும் வேலைவாய்ப்பை வாரி வழங்கியது.

விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு

விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு

நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் 7 பேருக்கும், பி அண்ட் ஜி, எஸ்சி ஜான்சன் மற்றும் சாம்சங் ஆகியவை தலா 6 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது.

110 பேருக்கு வேலைவாய்ப்பு

110 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த வருடம் கலந்துகொண்ட 100 நிறுவனங்கள் 110 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+