அம்மா கேன்டீன் போல நம்ம கேன்டீன், மதுபானத்திற்கு வாட் வரி நீக்கம்: கர்நாடக பட்ஜெட் 2017
2017-18 நிதியாண்டுக்கான 1.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் அறிக்கையை இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்தார்.
மார்ச் மாதம் முடியும் தருவாயில் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாளை தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில், இன்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நம்ம கேன்டீன்
இன்று முதல்வர் சித்தராமையா அறிவித்த பட்ஜெட் அறிக்கையில் முக்கியமாகப் பார்க்கப்படுவது தமிழகத்தில் அம்மா கேன்டீன் இருப்பதைப் போலவே கர்நாடகாவிலும் நம்ம கேன்டீன் என்ற மலிவு விலை உணவகத்தை இம்மாநில முழுவதும் அறிமுகப்படுத்தப்போவதாக முதல்வர் கூறினார்.
இந்த மலிவு விலை உணவங்களில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மதிய உணவு 10 ரூபாய்க்கும் அளிக்கப்பட உள்ளதாக பட்ஜெட் அறிக்கையில் திட்டம் வகுக்கப்பட்டது.
30 மாவட்டம்
இத்திட்டத்தை சவ்விர்சி மொபைல் கேண்டீன் மற்றும் ஜில்லா ஸ்ரீசக்தி அசோசியேட்ஸ் நிறுவனங்களின் வாயிலாக 30 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்ன பாக்ய திட்டம்
அதேபோல் அரிசி திட்டமான அன்ன பாக்ய திட்டத்தில் அரிசி விநியோக அளவை 5 கிலோ முதல் 7 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.
5,080 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு
மேலும் விவசாயத் துறைக்காக 2017-18ஆம் நிதியாண்டில் 5,080 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது கர்நாடக மாநில அரசு. இதன் வாயிலாக அடுத்து வரும் நிதியாண்டில் இம்மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சி 2.2 சதவீதம் அதிகரிக்கும் என முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாட் வரி நீக்கம்
அதேபோல் வைன், பீர், சாராயம் போன்றவற்றுக்கு வாட் வரியை முழுமையாக நீக்கப்படுவதாகச் சித்தராமையா கூறினார். இது குடிமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications