மல்டிபிலெக்ஸ் டிக்கெட் அதிகப்படியான விலை 200 ரூபாய்: கர்நாடக பட்ஜெட் 2017
புதன்கிழமை கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் மால்களில் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை அதிகளவில் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்ட இம்மாநில அரசு மல்டிபிலெக்ஸ் சினிமா டிக்கெட் விலையை அதிகப்படியான கட்டணமாக 200 ரூபாய் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.
மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளில் மதியம் 1:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை பிரைம் நேரங்களில் கன்னடா மற்றும் பிராந்திய மொழி திரைப்படங்களைத் திரையிடுவது கட்டாயமாக்கப்படும்.
மைசூர் ஹிம்மாவு பகுதியில் கர்நாடக திரைப்பட துறைக்காக புதிய பிலம் சிட்டியை அமைக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு மக்களின் போக்குவரத்து சேவையை மேலும் எளிமையாக்க BMTC 3000 புதிய பேருந்துகளை வாங்க உள்ளது இதில் 150 பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. மேலும் மின்சாரத்தில் இயங்கக் கூடி 50 பஸ்கள் மைசூருவில் இயக்கப்படும் என இம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் பட்ஜெடில் அறிவித்தார்.
2017-18ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் 3,000 பிளாட்களை BDA கட்டி முடிக்க உள்ளதாக அறிவித்தார் சித்தராமையா.


Click it and Unblock the Notifications