புதிய 5 சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகள்: கர்நாடகா பட்ஜெட்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமைகள், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி எனக் கர்நாடகா பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு அறிவித்த திட்டங்களை இங்குப் பார்ப்போம்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை கல்வி படுப்புகள் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் எச்ஐவி பாதிப்புள்ள குழந்தைகளுக்கு 25,000 நபர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

6 கோடி ரூபாய் செலவில் சித்ரதுர்கா மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஸ் மருத்துவமனைகள் துவங்கப்படும்.
ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கும் 1538 எண் அழைக்கக் கூடிய ஒரு ஆம்புளன்ஸ் வசதி செய்து தரப்படும்.
பெங்களூரில் உள்ள சஞ்சய் காந்தி விபத்து காய மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 20 படுக்கைகள் கொண்ட பாலி டர்மா மையம் மற்றும் 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும்.
150 சமூகச் சுகாதார மையங்களில் பிணக்கிடங்கு அமைக்கப்படும்.
மங்களூரில் உள்ள வென்லாக் மருத்துவமனை 10 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
114 தாலுகாக்களில் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும். 10 மாவட்டங்களில் இரத்த தானம் பிரிவுகள் அமைக்கப்படும்.
புற்றுநோய் மற்றும் இதய நோய் சிகிச்சைக்காகத் தேவநாகரி, ராமநகரா, தும்கூர், விஜயபுரா மற்றும் கோலார் மாவட்டங்களில் ஐந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவங்கப்படும்.


Click it and Unblock the Notifications