16 மாத உயர்வில் ரூபாய் மதிப்பு..!
இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் தொடர் உயர்வால் 3வது நாளாக இன்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
வட்டி விகிதங்களை உயர்த்துவதற்காக அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் 14ஆம் தேதி துவங்கிய நிலையில், புதன்கிழமை (15ஆம் தேதி) அதன் கூட்டம் முடிந்து அதன் முடிவுகளை வெளியிடும் நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 மாத உயர்வை அடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.73 ஆகத் துவங்கிய நிலையில், 66.52 ரூபாயாக உயர்ந்தது. இது நேற்றை வர்த்தகத்தை விடவும் 0.40 சதவீதம் அதிகமாகும்.
ஆசிய சந்தை
2017ஆம் ஆண்டில் ஆசிய சந்தையில் தென் கொரிய வான், தைவான் டாலருக்குப் பின் சிறப்பாகச் செயல்படும் நாணயங்களில் இந்திய ரூபாய் 3வது இடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 3.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வட்டி உயர்வு
மேலும் புதன்கிழமை நடந்து முடிய உள்ள அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் கணிசமான அளவில் வட்டி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை
இதன் எதிரொலியாக 14ஆம் தேதி வரலாறு காணாத உயர்வை அடைந்த சென்செக்ஸ் இன்று பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
மதியம் 1.30 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.55 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications