விவசாயிகளுக்கான பயிர் கடனுக்கு ரூ7,000 கோடி நிதிஒதுக்கீடு: தமிழகப் பட்ஜெட் 2017
10.30 மணிக்குப் பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் துவங்கிய தமிழக நிதியமைச்சர் வழக்கம் போல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பாராட்ட துவங்கினார். இதனால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
இதன் மூலம் ஏற்பட்ட அமளிக்கு மத்தியில் 2 முறை நிறத்தப்பட்டுப் பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் துவங்கினார் நிதியமைச்சர் ஜெயகுமார்.

பட்ஜெட் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முதல் வரி, கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஜெ அறிவித்த 164 தேர்தல் வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல தமிழக 2017-18 நிதியாண்டிற்குச் சுமார் 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டு வந்த அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.


Click it and Unblock the Notifications