மகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..!
மகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..!
தமிழகத்தின் 2017-2018-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் டி ஜெயகுமார் பல்வேறு சுகாதாரத் துறைக்கு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை இங்குப் பார்ப்போம்.
சுகாதாரத் துறைக்கு ரூ10,158 கோடி ஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு அளித்து வரும் மகப்பேறு உதவித் திட்டத்தின் நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு. இதற்காக மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ1,001 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கலைஞர் காப்பிட்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது முதல்வர் காப்பீடு திட்டமாக இருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ1,348 கோடி ஒதுக்கீடு.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைந்தவிலையிலான பொது மருந்துக் கடைகள் அமைக்கப்படும். அது மட்டும் இல்லாமல் விலை இல்லா ஜெனிரிக் மருந்துகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications