ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசின் பட்ஜெட் மார்ச் 16 வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. இதற்காக மெரினாவில் உள்ள முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கி ஆசிபெற்றுவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக நிதி அமைச்சர் டி ஜெயகுமார்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் நலத்திட்டங்களில் எந்தச் சமரசமும் இல்லை என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடன் சுமையில் தமிழகம் ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களால் கடும் நிதி சுமையில் அரசு சிக்கித் தவிக்கின்றது அதே நேரம் தமிழகத்தில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளதால் அரசின் வருவாயும் பல மடங்கு குறைந்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் கடன் அளவு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதற்கான வட்டியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஜெயலலிதா இருந்த போது சென்ற முறை வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த முறை புதிய வரிகள் ஏதேனும் விதிக்கப்படுமா, வரி விகிதம் ஏதேனும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
அதுமட்டும் இல்லாமல் சென்ற வாரம் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் கணிசமான அளவு உயர்த்தியுள்ளது..
இப்படிப் பட்ட சூழலில் நிதிநிலை தாக்கல் செய்யும் தமிழகத்தின் புதிய நிதி அமைச்சர் டி ஜெயகுமார் அவர்களுடைய தகுதிகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த டி ஜெயகுமார் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராகச் செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதன் பின் எந்த அமைச்சர் பதவியையும் பெறாமல் இருந்த ஜெயகுமார் அவர்களுக்கு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் ராஜிநாமா, அதிமுகவில் ஏற்பட்ட சிக்கல், புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பு அதனைத் தொடர்ந்து டி ஜெயகுமார் அவர்களுக்கு முதல் முறையாக நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இப்போது முதல் முறையாகப் பட்ஜெட் தமிழகப் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் டி ஜெயகுமார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும் சென்னை சட்டக்கல்லூரியில் 1987ல் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications