தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 40,000 கோடி ரூபாயை தாண்டும்..!!
சென்னை: 2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் மொத்த வருமானம் 1,48,000 கோடி ரூபாயாகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் மானியம், கடன் அளவின் உயர்வால் வட்டி சுமை ஆகியவற்றில் அதிகளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதேநிலையில் வருமான அளவில் உயர்வும் அதிகளவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014-15நிதியாண்டின் பசி தமிழ்நாட்டின் மொத்த வருமானம் 1,48,000 கோடி ரூபாய், இதில் மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக 70,000 கோடி ரூபாயைச் செலவிடுகிறது தமிழக அரசு.
மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கான மானிய தொகையாக 60,000 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது.
தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பிற மேம்பாட்டுக்காக வாங்கப்பட்ட கடனுக்கான வட்டி தொகை மட்டும் ஒரு வருடத்திற்கு 24,000 கோடி ரூபாய் செலுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையின் அளவு 6,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 வருடத்தில் அறிவித்த நலத் திட்டங்களின் மூலம் நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது தெரிகிறது. இதன் மூலம் 2017-18ஆம் நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 40,000 கோடி ரூபாயாக உயரும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications