ஒரு ‘ஐ போன்’ வாங்கும் விலையில், மின்சாரம் வழங்கக்கூடிய ‘காற்றாலை’-ஐ உங்கள் வீட்டிற்கு வாங்கலாம்..!

ஒரு ‘ஐ போன்’ வாங்கும் விலையில், மின்சாரம் வழங்கக்கூடிய ‘காற்றாலை’-ஐ உங்கள் வீட்டிற்கு வாங்கலாம்..!

ஒரு ஐ போன் வாங்கும் விலையில், உங்கள் வீடு முழுவதற்கும் வாழ்நாளெல்லாம் மின்சாரம் வழங்கக்கூடிய ஒரு காற்றாலை விசையாழியை வாங்கலாம்.

இந்தியாவில் புதியதாகத் தொடங்கப்பட்ட அவந்த் கிரேடு இன்னோவேஷன் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தினமும் 3 முதல் 5 கிலோவாட் மணி நேர மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மலிவு விலை காற்றாலை விசையாழியை உருவாக்கியுள்ளது.

கேரள முதலமைச்சர் பிணாராயி விஜயன் அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தை வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் கேரள மாநிலத்தில் ஒரு பெறும் போராட்டமே வெடித்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலில் சமநிலையின்மையை உருவாக்கி மாநிலத்தின் மாபெரும் நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அழித்துவிடும் என்று கூறுகிறார்கள்.

இந்தத் திட்டத்தால் விளையக்கூடிய தாக்கங்கள் ஒன்றும் அரசாங்கம் புதிது இல்லை, ஆனால் கேரளாவில் மின்சாரத்திற்காக ஒரு பகுதியாகத் தனியார் துறையின் மீது சார்ந்திருக்கும், அதிகரித்து வரும் மின்சார நெருக்கடியைத் தடை செய்ய இப்போது நடைமுறையில் இருக்கும் இந்த வழிமுறையைத் தவிர வேறு தேர்வு இல்லை என்று கேரளா முடிவு செய்துள்ளது.

இதர மாநிலங்களிலும் விஷயம் ஒன்றும் வேறாக இல்லை. தமிழகத்தில் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இந்தியாவின் பல பகுதிகள் இன்னமும் இருளாக இருக்கும் போது கேரளா ஏறக்குறைய 100 சதவிகிதம் மின்சாரம் உள்ள மாநிலமாக அடையப் பெற்றுள்ளது. இன்றைய நாளில் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதிக்கு மின்சாரம் ஒரு தொலைதூரக் கனவாகவே எஞ்சியிருக்கிறது.

இரண்டு சகோதரர்கள்

இரண்டு சகோதரர்கள்

இந்தியாவின் மின்னாற்றல் நெருக்கடியை ஒரு கடந்த கால வரலாறாக ஆக்க இரண்டு சகோதரர்கள் விரும்புவதாகச் சந்தைக்குள் வந்தனர். இந்த இரட்டையர்கள் தாங்கள் உருவாக்கியுள்ள புதிய தீர்வானது சுற்றுச்சூழல் சமநிலையைச் சிறிதளவு கூடச் சற்றும் பாதிக்காது என்று சொல்கின்றனர்.

மலிவு விலை காற்றாலை

மலிவு விலை காற்றாலை

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த அவந்த் கிரேடு இன்னோவேஷன் நிறுவனம் அருண் மற்றும் அனூப் ஜார்ஜ் என்னும் கேரளாவை சேர்ந்த சகோதர்களால் நிறுவப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு வீடு முழுவதற்கும் வாழ்நாளெல்லாம் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மலிவு விலை காற்றாலை விசையாழியுடன் நம் முன் கொண்டு வந்துள்ளார்கள்.

60,000 ரூபாய் முதலீடு போதும்

60,000 ரூபாய் முதலீடு போதும்

மேற்கூரை மின்விசிறியின் அளவு இருக்கும் இந்தக் காற்றாலை விசையாழி ஒரு முறை வெறும் 60,000 ரூபாய் முதலீட்டில் நிறுவினால் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு நாளுக்கு 5 கிலோவாட்/மணிநேரம் மின்சாரத்தை உருவாக்கி பயன் அளிக்கும்.

குறிக்கோள்

குறிக்கோள்

எங்கள் குறிக்கோள், மின்சாரத் தட்டுப்பாட்டை முழுவதுமாக நீக்குவது, சிக்கலில் இருக்கும் மின்சார விநியோக அமைப்பின் மீது சார்ந்திருப்பதைக் குறைப்பது மற்றும் தன்னிறைவான மின்சார உற்பத்தியை உருவாக்கி, தேவைப்படுவோர்க்கு எல்லாம் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடிய புதுப்பிக்கக்கூடிய மின்னாற்றலை விநியோகம் செய்வது என்றும் அப்படிச் செய்வதன் மூலம் நாம் அனைவரும் கூட்டாக ஒரு தூய்மையான சுற்றுச்சூழலை வரவேற்க முடியும், ஒரு புதிய பொருளாதாரச் செழிப்பை மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம், இது தான் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் ‘நாங்கள் செய்வது என்ன' என்ற தலைப்பில் படிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

முதல் படைப்பு

முதல் படைப்பு

எங்கள் முதல் படைப்பு, வீட்டு உபயோகம், வணிகம், விவசாயம், கிராம மின்விநியோகம் மற்றும் பல உபயோகங்களுக்குப் பொருத்தமான ஒரு மிக மலிவு விலை சிறிய காற்றாலை விசையாழி ஆகும். 2016 இன் போது இதைச் சந்தையில் அறிமுகப்படுத்த நோக்கம் கொண்டிருந்தோம்.

மிகப்பெரிய வாய்ப்புகளுள்ளன

மிகப்பெரிய வாய்ப்புகளுள்ளன

2015 இல் இந்த அவந்த் கிரேடு இன்னோவேஷன் நிறுவனம் பசுமை இதயம் மற்றும் ஆன்மாவைக் கொண்ட நிறுவனங்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த அவந்த் கிரேடு இன்னோவேஷன் நிறுவனத்திற்கு வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் உள்ளன.

இந்தியா

இந்தியா

உலகின் ஆறாவது மிகப்பெரிய மின்சாரச் செலவழிக்கும் நாடாக உள்ள இந்திய உலக ஆற்றல் நுகர்வின் கணக்கின் படு 3.4 சதவீத ஆற்றலை பயன்படுத்துகின்றது.

கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதில் சிக்கல்

கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதில் சிக்கல்

இந்தியாவில் உள்ள கூட்டாண்மை அரசு மற்றும் மத்திய அரசாங்கத்தாலும் இந்த விஷயத்தில், கடைக்கோடி கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதில் தேவைப்படும் மிகப்பெரிய அக்கட்டமைப்பு செலவுகளைத் தாங்க முடியவில்லை.

மின்கம்பங்கள் மற்றும் மின்சாரக் கம்பி இணைப்புகளை எழுப்பப் பல கோடி ரூபாய் செலவுகளைக் கொண்ட மாபெரும் முதலீடுகள் தேவைப்படுகிறது.

 

அவந்த் கிரேடு இன்னோவேஷன்

அவந்த் கிரேடு இன்னோவேஷன்

இங்கே தான் இந்த அவந்த் கிரேடு இன்னோவேஷன் நிறுவனம் காட்சிக்குள் வருகிறது. சிறிய காற்றாலை விசையாழி 3 முதல் 7 லட்சம் வரை பண மதிப்புள்ள 1கிலோவாட் மின்னாற்றலை உருவாக்கும் போது (அமெரிக்க டாலர் 4,000 முதல் 10,000), எங்கள் நிறுவனம் அதை ரூபாய் 60,000 த்திற்கும் குறைவான விலைக்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறோம் (சுமார் 750 அமெரிக்க டாலர்). மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் போது விலை குறையும்" என்று அருண் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறுகிறார்.

முன்னோட்டம்

முன்னோட்டம்

இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த நிறுவனம் தனது முன்னோட்ட திட்டத்தைத் தலை நகரமான திருவனந்தபுரத்தில் ஒரு சர்ச்சில் நிறுவியுள்ளது. இந்தச் சிறிய காற்று விசையாழியின் முன்வடிவம் உயர் அளவுள்ள மின்திறனான 300 கிலோவாட் அல்லது அதற்கும் அதிகமாகக் கூட உருவாக்கியுள்ளது என்று கூறுகிறார் இணை நிறுவனர் அருண்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+