நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவிப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவிப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு நவம்பர் 9-ம் தேதி புதிய 2,000 ரூபாய் நொட்டையும் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டனர்.
2,000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் மக்களவையில் கேட்க்கபட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் ஏதும் இல்லை என்று எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.
திரும்பப் பெறப்பட்ட செல்லா ரூபாய் நொட்டுகள்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 12.44 லட்ச ரூபாய் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இவை இப்போது ஆர்பிஐ வசம் உள்ளதாகவும், முன்பு தெரிவிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தவறானவை என்றும் திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கணக்கு எடுத்துவருவதில் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
புழக்கத்தில் விடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள்
2017 மார்ச் 3-ம் தேதி வரை 12 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும், இதுவே ஜனவரி 27-ம் தேதி அன்று வரை 9.921 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளாக இருந்தது என்றும் கூறினார்.
வளர்ச்சி விகிதம்
இப்போது செல்லா ரூபாய் நோட்டு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் வருங்காலத்தில் வளர்ச்சி விகிதம் முன்பு இருந்த நிலைக்கே திரும்பப் வரும் என்றார்.
எதற்காகச் செல்லா ரூபாய் நோட்டு அறிவிக்கப்பட்டது
ஊழல், கருப்புப் பண, கள்ள நோட்டு மற்றும் தீவிரவாதிகளிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வெளிக்கொண்டு வரவே இந்தச் செல்ல ரூபாய் நோட்டுகள் அறிவிக்கப்பட்டன என்றும் கூறினார்.
வங்கிகள் கடன் அடிப்படை குறைந்தது
இந்த முயற்சியினால் வங்கிகளில் டெபாசிட் அதிகரிக்கப்பட்டதாகவும், வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கடன் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கட்டுப்பாடுகள் நீக்கம்
செல்லா ரூபாய் நோட்டு அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது அந்தக் கட்டுப்பாடுகள் பெரும் அளவில் இப்போது நீக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications