பாபா ராதேவின் அடுத்த அதிரடி.. பதஞ்சலி தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டம்..!

பாபா ராதேவின் அடுத்த அதிரடி.. பதஞ்சலி தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டம்..!

இந்திய நுகர்பொருள் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முன்னிலை வகிக்கும் நிலையில் இப்போது தனது அடுத்தத் திட்டமாகச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் உள்ளார்.

மத்திய அரசின் கிழக்கு சட்டத்தின் மூலமாகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தங்களது தயாரிப்புகளை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

புதிய தயாரிப்பு ஆலை

புதிய தயாரிப்பு ஆலை

பதஞ்சலி நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் தங்களது புதிய தயாரிப்பு ஆலையைத் துவக்க இருக்கின்றது. இங்கு மத்திய அரசு நேரடி சாலை, நீர் மற்றும் விமானப் போக்குவரத்திற்கு ஏற்றப் பன்முக மாதிரி மையத்தைத் தெற்கு ஆசிய நாடுகளுடன் மேலும் நட்பாகவும், வியாபாரத்தையும் அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கி வருகின்றது.

பதஞ்சலி தெற்காசிய நாடுகளில் சீனா, மியான்மார், வங்க தேசம் மற்றும் பிற நாடுகளுக்குச் சாஹிப்கன்ஜ் பன்முக மாதிரி முனையம் மூலமாக ஏற்றுமதி செய்ய இந்திய உள்நாட்டு நீர்வழிகள் அதிகாரசபை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

 

குறைந்த செலவில் ஏற்றுமதி

குறைந்த செலவில் ஏற்றுமதி

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் போது குறைந்த செலவில் பொருட்களை அனுப்ப முடியும் என்றும் இதனால் ஏற்றுமதி செலவுகள் குறையும் தெற்கு ஆசியா நாடுகளில் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்க முடியும் என்றும் பதஞ்சலி நினைப்பதாக இது குறித்து அறிந்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்க தேசம் மற்றும் மியான்மாருக்கு நேரடி ஏற்றுமதி வாய்ப்பு

வங்க தேசம் மற்றும் மியான்மாருக்கு நேரடி ஏற்றுமதி வாய்ப்பு

ஜார்ஜண்ட் மாநிலத்தில் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் மட்டும் தான் கங்கை ஆறு பயணிக்கின்றது, இந்த வழித்தடத்தைப் பதஞ்சலி பயன்படுத்தும் போது வங்க தேசம் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு நேரடியாகப் பொருட்களை அனுப்ப முடியும்.

மாநில அரசுடன் பேச்சு வார்த்தை

மாநில அரசுடன் பேச்சு வார்த்தை

ஜார்கண்ட் மாநில அரசுடன் தொழிற்துறை வளர்ச்சி குறித்துப் பதஞ்சலி நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் நிறுவனத்தின் செதித் தொடர்பாளர் தகவல்கள் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஏற்றுமதி

சீனாவின் ஏற்றுமதி

சீனாவின் ஏற்றுமதி சந்தை மதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் ஏற்றுமதி விகிதத்தைக் கண்டு சீனா கண்டு அச்சம் கண்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தொழிலாளர்களிடம் செலவுகளும் சீன நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ளது.

உற்பத்தி வளர்ச்சி

உற்பத்தி வளர்ச்சி

சீனாவின் குலோபல் டைம்ஸ் பத்திரிக்கை சீனா இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி குறித்துக் கண்காணிக்க வேண்டும், இந்தியா இன்னும் பல துறைகளில் துவக்க நிலையிலேயே உள்ளது, மேலும் அவர்களுக்கு வெளிச்சந்தையைப் பிடிக்க அதிகத் தொழிலாளர்கள் மற்றும் திறனும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஊதிய விகிதம்

ஊதிய விகிதம்

அன்மையில் வெளிவந்த ஒரு ஆய்வின் படி இந்திய தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்தைச் சீனாவில் ஒரு மணி நேர ஊதியமாகப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளது.

ஏற்றுமதி 42 சதவீதமாக அதிகரிப்பு

ஏற்றுமதி 42 சதவீதமாக அதிகரிப்பு

மேலே கூறிய ஆய்வுகள் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி 42 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது ஆகும். இது தொடர்ந்தால் இந்தியாவின் ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+