உலகின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஊழியர்களின் குறைந்த திறன் அல்லது பொருத்தமில்லா திறன் காரணமாக 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் 2-3 சதவீத ஊழியர்களைக் குறைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது சிடிஎஸ்.

டிசம்பர் 2016 முடிவடைந்த காலாண்டில், இந்த அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 2.60 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 75 சதவீத ஊழியர்கள் இந்திய சந்தையில் இருக்கும் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
2 வருடங்களுக்கு முன்பு சிடிஎஸ் நிறுவனம் 1 சதவீதமும், 201ஆம் நிதியாண்டில் 2 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. மார்ச் 31, 2017 ஊழியர்களின் தகுதி ஆய்வுகள் முடிவுகள் வெளியான பின்பே எத்தனை சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிய வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இத்தகைய பணிநீக்கம், இந்த வருடம் காக்னிசென்ட் நிறுவனத்தையும் தாண்டி பிற ஐடி நிறுவனங்களில் இந்த வருடம் பணிநீக்கம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications