ஆன்லைன் டிஜிட்டல் வேலெட் நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் பேமெண்ட் வங்கியைத் துவங்கும் நிலையில், தனது டிஜிட்டல் வேலெட் சேவை இந்தியாவைத் தாண்டி கனடா நாட்டில் விரிவாக்கம் செய்துள்ளது.
கனடா நாட்டில் விரிவாக்கம் செய்துள்ள பேடிஎம் சேவையில் சென்போன், கேபில், இண்டர்நெட், தண்ணீர், மின்சாரம் கட்டணங்களையும் தாண்டி இன்சூரன்ஸ், சொத்து வரி போன்றவற்றையும் செலுத்தும் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது பேடிஎம்.

பேடிஎம் நிறுவனத்தின் டேட்டா விஞ்ஞானிகள் கனடா நாட்டின் டொராண்டோ நகரத்தில் 2014ஆம் ஆண்டு முதலே இயங்கி வருகிறது. இந்நிலையில் தனது சேவையை மார்ச் 16ஆம் தேதி முதல் கனடாவில் துவங்கியுள்ளது.
இந்தச் சேவையை டொராண்டோ மாகாணத்தில் மேயர் துவங்கி வைத்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பேடிஎம் நிறுவனத்தின் சேவை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. இந்நிலையில் டிசம்பர் 2017 முடிவில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 கோடியும், 1 கோடி ஆப்லைன் வர்த்தகர்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications