வருமான வரித்துறை கடந்த சில மாதங்களாக வரி வசூலில் மிகப்பெரிய அளவிலான கவனத்தைச் செலுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதன்படி வரி செலுத்தாத நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்களைப் பத்திரிக்கை, இணையதளம் எனப் பல இடங்களில் வெளியிட்டு அவர்களை அசிங்கப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வருமான வரித்துறையினர் வரி செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடப்பட்ட நிறுவனங்கள் மொத்தம் 448.02 கோடி ரூபாய் வரி நிலுவையை வைத்துள்ளது.
இதன் மூலம் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகிய இரண்டு வரிகளையும் செலுத்தாதவர்கள் உடனடியாக வரி பாக்கியைச் செலுத்துமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு மத்திய நேரடி வரித் துறை, வரி செலுத்தாத தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்வை மக்கள் பார்வைக்கு அறிவிக்கப் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் படியே தற்போது 448.02 கோடி ரூபாய் அளவிலான வரி தொகையைச் செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் வருமான வரித்துறை 67 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications