இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் ஆதிக்கத்தை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ 6 மாதத்தில் தகர்த்தெறிந்த நிலையில், இந்த இரு நிறுவனங்களையும் ஒரே நேரத்தில் தூக்கி சாப்பிட வருகிறது ஐடியா செல்லுலார்.
ஐடியா-வோடபோன் கூட்டணிக்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. இப்புதிய கூட்டணி நிறுவனத்தின் வருடாந்திர வருமானத்தின் அளவு 80,000 கோடி ரூபாய்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தின் மூலம் டெலிகாம் சந்தையைக் கலக்கிய நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பல வருடங்களாக வர்த்தக ரீதியில் தொடர்ந்து போட்டி போட்டு வரும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார மங்களம் பிர்லா-வின் அதிரடி திட்டத்தைத் தீட்டினார்.. இதன் படி இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா செல்லுலார் நிறுவனம் வோடபோன் நிறுவனத்தை வாங்கி இதன் மூலம் ஏர்டெல், ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட முடிவு செய்தார் குமார மங்களம் பிர்லா. இத்திட்டம் தற்போது பிர்லா குழுமத்தின் நிர்வாகக் குழு பலகட்ட ஆலோசனைக்குப் பின் முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் இந்திய டெலிகாம் சந்தை மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்திக்க உள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தில், அதுவும் யாரும் அசைக்க முடியாத இடத்தில் பல ஆண்டுத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் அறிமுகத்தில் கலகலத்துப் போனது நாம் அனைவரும் பார்த்தோம். இந்நிலையில் இந்திய டெலிகாம் சந்தையில் 35 சதவீத வாடிக்கையாளர் சந்தையைப் பெறுகிறது ஐடியா-வோடபோன் கூட்டணி. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஆஸ்தான முதல் இடம் பறிபோகிறது. தற்போதைய நிலவரத்தின் படி.. ஐடியா செல்லுலார்- வோடபோன் இந்தியா நிறுவனத்தின் இணைப்பின் மூலம் இக்கூட்டணியில் 40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற உள்ளது இதன் வாயிலாக இந்திய டெலிகாம் சந்தையில் 35 சதவீத வாடிக்கையாளர் சந்தை, மொத்த வருவாயில் 41 சதவீத்தை கொண்டு அடுத்தச் சில வருடங்களுக்கு யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளது. இப்புதிய கூட்டணி. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான வோடபோன் HUTCH-Essar குழுத்தின் வர்த்தகத்தைக் கைப்பற்றியதன் வாயிலாக இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது வோடபோன். இதன் பெயர் வோடபோன் இந்தியா. வோடபோன் இந்தியா, இந்தியாவில் டெலிகாம் சேவையிலும், மொபைல் டவர் வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது டவர் வர்த்தகத்தில் செய்துள்ள முதலீட்டைத் தனிப் புதிய நிறுவனமாகக் கொண்டு இயக்க வோடபோன் இந்தியா முடிவு செய்துள்ளது. டெலிகாம் சேவை முழுமையாக ஐடியா செலுலார் நிறுவனம் வாங்க உள்ளது. ஐடியா - வோடபோன் கூட்டணியில், வோடபோன் 45.1 சதவீத பங்குகளைப் பெற்றிருக்கும். கூட்டணியில் கிடைக்கும் மொத்த பங்குகளில் 4.9 சதவீதத்தை ஐடியா செல்லுலார் பங்குதார்களுக்கு 3,874 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது. மேலும் குமார் மங்களம் பிர்லா மற்றும் பிற பங்குதாரர்கள் இக்கூட்டணி நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளைப் பெற்று, எஞ்சியுள்ள பங்குகளைப் பொதுச் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் என ஐடியா செல்லுலார் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 52,700 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் வோடபோன் இணைப்பின் மூலம் இக்கூட்டணியில் மொத்த கடன் அளவு 55,200 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான இந்த இணைப்பு அடுத்த 24 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்பிற்காகப் பங்குதார்கள், கடன் அளித்தவர்கள்ஷ பங்குச்சந்தை, செபி, டெலிகாம் துறை, CCI அமைப்பு என அனைத்துத் தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர். மொபைல் வர்த்தகச் சேவை நிறுவனமான இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் ஐடியா 11.15 சதவீதமும், வோடபோன் 42 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு முன் இண்டஸ் டவர்ஸ் முதலீடுகள் அல்லாமல் ஐடியா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 82,800 கோடி ரூபாய். ஐடியா செலுலார் நிறுவனத்தின் மதிப்பு 72,200 கோடி ரூபாய். இந்த இணைப்பின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15 சதவீரம் வரை உயர்ந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் லாபத்திற்கான பங்குகளை அதிகளவில் வாங்கியதால் இதன் மதிப்பு 8 சதவீதம் வரை குறைந்தது.
ரிலையன்ஸ் - பிர்லா
குமார மங்களம் பிர்லா
இணைப்பு
முதல் இடம்
வோடபோன்... பிரிவும் இணைப்பும்...
கூட்டணி பங்கு விபரம்
மொத்த கடன்
24 மாதங்கள்
இண்டஸ் டவர்ஸ்
மொத்த மதிப்பீடு
பங்குச்சந்தையில் உயர்வு...


Click it and Unblock the Notifications